முருகன் App
மாவைக்கந்தர் அகவல்
அகவல்2 / 4
மாவைக்கந்தர் அகவல்

அகவல்

✓
திருப்பரங் குன்றத் திருப்பமர் செல்வ
சீரலை வாயிடைச் சேறிய விமல
ஆவினன் குடிகக ணசைஇய பெரும்
ஏரகத் தருளொடு மினிதுறை யமல
குன்றுதொ றாடுங் குணனுடைத் தேவ
பழமுதிர் சோலைப் பருப்பத முதல்வ
சந்ததஞ் சுரர்தொழக் கந்தவெற் பிருந்தோய்
வள்ளியை மணங்கொளீஇ வள்ளிவெற் புறைந்தோய்
பிணிக ளகற்றித் தணிகைய மர்ந்தோய்
குமர கோட்டத் தமருபு வசித்தோய்
✓
நிலைத்தகுங் கதிரை மலைத்தலை வதிந்தோய்
நாமம் பெறீஇக்கதிர் காமம் பயின்றோய்
அண்ணலஞ் சிவனார் கண்ணரு டனையா
மாதரார் கௌரி காதற் புதல்வ
கார்த்திகை தந்த சீர்த்திகொண் மைந்த
கங்கை பயந்த பங்கமில் குழவி
அமரி யெண்டோளி சமரிதன் பால
காடுகா ளென்னு மோடிதன் சிறுவ
அஞ்செனுங் கரத்துக் குஞ்சரற் கிளைவ
வாசவ னம்பி கேசவன் மருக
✓
மான்மக டேவர் கோன்மகள் கணவ
வானுறு மமரர் சேனைத் தலைவ
பகல்செயுஞ் செவ்வேற் படையுடை யானே
பசுங்கதிர் மஞ்ஞைப் பரியுடை யானே
கோழி யோங்கிய கொடியுடை யானே
குலவுறு நீப மலருடை யானே
மள்ளருண் மள்ள னாகுபு நிற்போய்
மாற்றார் தமக்குக் கூற்றாய் நிற்போய்
பொருளெந் தன்னி லொருவனாய் நிற்போய்
புகழ்பெறு மூவர் முதல்வனாய் நிற்போய்
✓
நெடுவரைக் குறிஞ்சி நிலக்கிழ வோனே
புலமையின் முதிர்ந்த புலவர்க ளேறே
சான்றோர் புகழ்ந்த தகைமொழி மலையே
உயிர்க்குநை தோறு முறைதரு குகனே
எந்த ஞான்று மிளமைசேர் முருகா
குற்சிதம் போக்கிக் குணனருள் குமரா
சரவணோற் பவனே சாமி குழகா
பொன்னே மணியே பொலிநறும் விரையே
தண்ணார் கரும்பே ததைமலர்த் தேனே
என்னிரு விழிமணிப் பாவை யாவாய்
✓
மனமெனுங் கண்ணுண் மணியெனு மறிவுட
பாவை யாகிய பல்லுயிர்க் குயிரே
பரிசில ராய்நின் பதம்பணி பண்பின்
வறியவர்க் கென்றுங் குறைகெடுத் தருள்வோய்
பிணியினர்க் கென்றுந் துனியறுத் தருள்வோய்
அடலிலார்க் கென்று மிடல்கொடுத் தருள்வோய்
கலைவராரர்க் கென்றுங் கலைவரப் புரிவோய்
இன்னன மியாவ ரியாதியா தடைவான்
நச்சின ரஃததை நயந்தரு ணெடுவேள்
பெறலரு மோக்கத் திருவரு ளியவுள்
✓
நின்செய லறிந்த நிலையுடைப் பெரியோர்
கருணைசேர் கந்த சாமிக் கடவுணீ
கண்டவர் யாரும் விண்டுவிண் டோட
முட்டிய தகர்ப்பின் னிட்டனை யென்பர்
சிரமது குனியாப் பிரமனைக் குட்டிப்
புகுத்தியுஞ் சிறைக்க ணகற்றினை யென்பர்
பூமல ரிருந்து தாவறு முலகப்
படைத்தற் றொழிலு னடத்தினை யென்பர்
ஓமெனுந் தாரக மாமொழிப் பொருளை
ஈசனுக் கருளிய தேசிக னென்பர்
✓
கடலகத் திட்ட வடலகப் புயனை
வீக்கிய மாயை போக்கினை யென்பர்
வஞ்சக வுருவாய் விண்டொட நெடுகி
வளர்ந்ததோர் வரையைப் பிளந்தனை யென்பர்
கொடியவெஞ் சூரைக் குலமுட னறுத்தே
நீக்கரு மகிழ்சுரர்க் காக்கினை யென்பர்
விண்ணவர் கோமா னண்ணலங் களிற்றை
நெருக்கிய சாப முருக்கினை யென்பர்
தாரணி யாண்ட சீர்முசு குந்தற்
கந்தமி னல்வரந் தந்தனை யென்பர்
✓
பாரகம் புகழு நாரத முனிவற்
கடுத்த பெருமை கொடுத்தனை யென்பர்
சீர்சால் பொதியச் சிறுமுனி வரற்குத்
தெளித்தன நூற்பொரு ளளித்தனை யென்பர்
பொய்வழிச் சமய மையிரு ளகற்ற
நீயே சம்பந்த னானா யென்பர்
அற்புத மின்னன பற்பல வியற்றிச்
சிறந்த நின்பெருமை யறைந்திட முடிமோ
நல்லிசை மண்டிய நலங்கிளர் சேய்நீ
ஒல்லென் றிரைபிற மூவர்நீர்க் கடல்சூழ்
✓
கல்லெ னருவிக் கான்யாற் றடைகரை
ஊர்மலி யிலங்கைச் சீர்மகண் முகனாயப்
பேர்பெறக் கிடந்து பிறங்கியாழ்ப் பாண
மாநகர்த் துலங்கு மணமிகு திலதம்
நாடொறுங் குன்றிற் குவைஇய பண்டங்
கலத்தாற் றரீஇய கழிக்கரை நெய்தற்
பலத்தாற் றினியுடற் பரதவர் வணிக
மாக்க ளந்தியர் மற்றவர் போகித்
தேக்கிய வீதிகள் செறிகாங் கேயன்
துறைக்குத் தென்பாற் றுகளறு நிலயம்
✓
நிறைக்குந் தரும நிலைக்கள னாகிக்
கோவி றடமடங் கோபுர மாதி
தேவநற் புண்ணிய தீர்த்தமு மல்கி
நிருத்தன் சினகரந் திருத்தக மேவி
நுரைத்தலைப் புனலால் வரன்றிடு மணிகொள்
சாரற் குறிஞ்சிக் கீரி மலைக்கு
நேரிற் றென்கீழ் நிலவுறு பாக்கங்
காடுசார் முல்லை கழிந்ததற் கப்பால்
நாடுசார் மருத நன்னிலத் திடையே
இஞ்சி கருணை யியல்வகை மூலம்
✓
மஞ்சடாம் புல வல்லிமற் றவைகள்
பைங்கிளி மஞ்ஞை பகர்குயி லாதி
தங்கிய வைப்பிற் றண்டலை தோறும்
வாழை வருக்கை மாவொடு தெங்கு
பூக நரந்தம் புகழெழு மிச்சை
மாதுளை கன்ன லாசினி மருவித்
தேம்படு பனைநல் வேம்பொடு நாவல்
தண்புளி யாலர சாத்தி யிருப்பை
ஆதிய விரசி யழகுறு மாவையில்
வீதிகள் மடங்கள் விரையுறு பூங்கா
✓
கொடிதவழ் கோபுரங் கூவல்கள் பல்குங்
கடிமதிற் கோவிற் கடவையின் கண்ணே
முழுமதி யன்ன மூவிரு முகனுஞ்
செழுமல ரன்ன பன்னிரு விழியுஞ்
செங்கை யிராறும் பொங்குறு படையுங்
கொங்கல ரணிக டங்கிய புயனுங்
கொழுமலர்க் கஞ்சக் கழலடி யிணையுங்
கெழுமிய வடிவோ டரிவையர் சகிதம்
எழின்மயின் மிசையே யெழுந்திருந் தருளல்
நம்மனோர்க் கருடருஞ் செம்மையி னன்றோ
✓
தாயுந் தந்தையு மாகிய நீயிஞ்
ஞாலத் திருள்கெட மோலி கவித்துங்
கருநீ றடையத் திருநீ றணிந்தும்
மண்டலம் மகிழக் குண்டலம் புனைந்துங்
காப்புப் புரிதரக் காப்புச் செறித்துந்
துயராழி போக்க விரலாழி யிட்டுஞ்
சுழல வினைகள் கழல்க ளணிந்தும்
நலம்படக் காலிற் சிலம்புக ளியைத்தும்
இங்ஙனம் விளங்கினை யாவொடு மன்றே
பூமக ளுறையு மாவையம் பதியிற்
✓
றகுமுறை விரத நகுலநன் முனிக்குக்
கருதிய வரநீ யருளினை யெனவுங்
குதிரை முகத்தி னரசிளங் குமரி
மாற்றரு நோய்குறை பாற்றினை யெனவுங்
கன்ன பரம்பரைக் கதைகளு முளவே
மாவையில் வந்துன் மலரடி போற்றி
வேண்டுந வேண்டியாங் கெய்தினர் பலர்தாம்
ஆண்டாண் டுறைதலு மறிவா மன்றே
நின்றன தத்தன் குன்ற வில்லி
தன்செய லாயத் தகுமினி யையா
✓
மந்திர மலையை மத்தெனக் கொண்டே
பாற்கடல் கடைநாள் எழுந்திடு நஞ்சை
உண்டுயிர் யாவையுங் காத்தன னென்றுந்
தக்கன் முனிவாற் றனித்துயர் கொண்ட
சோமனைச் சடையிற் சூடின னென்றும்
அஞ்சுற யாரும் வந்ததொர் நதியைத்
தரித்ததன் வலிமை கெடுத்தன னென்றும்
வந்திதன் பிட்டைக் கந்தையி லேற்றே
உண்டனன் மண்ணைச் சுமந்தா னென்றும்
வானவ ருய்யத் தானவர் புரங்கள்
✓
சிரித்துப் பொடியா யெரித்தன னென்றும்
யோகமும் விழைந்த போகமுந் தழைக்க
யோகியும் போகியு மானா னென்றும்
வாசவன் சேய்செய் மாசறு தவத்தாற்
பாசு பதந்தரப் பரிந்தன னென்றுந்
தந்தைதா ளறுத்த மைந்தனுக் கன்று
முந்துறு முயர்நிலை தந்தா னென்றும்
நாலுறுந் நாலாண் டுடைமறை யோற்காக்
காலனைக் காலா லுதைத்தன னென்றுங்
குருவடி வாகித் திருவுப தேசம்
✓
வாத வூரனுக் கோதின னென்றும்
ஞான சம்பந்தற் கான வெண்முத்துச்
சிவிகை யாதி யுதவின னென்றும்
வாகீச னுக்குப் போகாத குன்மங்
கொடுத்துச் சிவனெறிப் படுத்தின னென்றும்
சுந்தரன் பொருட்டுத் தூதுநள் ளிரவிற்
சென்றே பரவைக் குரைத்தன னென்றும்
இவைபோ லின்னு நவைதீ ராடல்
நனந்தலை யுலகத் தனந்தபல் கோடி
ஆங்காங் கருளின் விளைத்தன னென்றும்
✓
அலகிலா நூல்கண் மலைவிலா தியம்புஞ்
சாம்பவி நின்றாய் தனிச்செய னோக்கிற்
தக்க னுஞற்று தனித்தவக் கிரங்கி
மகளெனச் சின்னாள் வைகின ளவளே
வரைகளுக் கரையன் புரிதவப் பயனாய்
உலகினி னிலவு மலைமக ளவளே
நந்நான் கிரட்டி நல்லறம் பலவும்
ஒப்பறச் செய்திடு முத்தமி யவளே
எவ்வகை யருளு மெளிதினி லினிதாய்
அழகொடும் பிறப்ப தவள்வயி னன்றே
✓
வினைக ளகற்றும் விநாயக னாகிநி
னண்ணன் பெருமையை யெண்ணுவ மிப்பால்
நம்பிக் கருங்கலை ஞான மளித்துப்
புரந்தரற் காகப் பொன்னியைப் பாய்ச்சிக்
கலங்கஞர் விளைத்த கயமுகற் றடீஇக்
குறுமுனி தனக்குப் பெறுவர மருளி
இராவணன் றனக்குப் பராவுரு ளுதவி
அவ்வையை வெள்ளி யகன்கிரி மிசையே
முன்னர்ப் புகுதர முறைமையிற் கூட்டி
இவ்வா றளவில் கைமா றற்ற
✓
றிருநலன் கொழிக்குங் கருணையங் கடலென்
றறைந்த தறிந்தவா றறைந்து மன்றே
ஆதலி னின்னை யன்பிற் கைதொழூஉப்
பரவிப் பதம்பணிந் துற்றனென் பரம
அருட்குண னுன்ற னியற்குண னன்றித்
தந்தைக் குளகுண மைந்தற் கும்மே
அனையர்க் குளகுணந் தனயற் கும்மே
அண்ணற் குளகுணந் தம்பிக் கும்மே
ஆயினுந் தோன்றா லளியனே னீண்டு
வலையினிற் பட்ட வுயிரினைப் போலும்
✓
புலியெதிர்ப் பட்ட பசுவினைப் போலும்
அராமுற் பட்ட வெளியினைப் போலும்
கருடனைக் கண்ட வரவினைப் போலும்
அரியினைக் கண்ட கரியினைப் போலும்
தனித்துயர்க் கடலி னனிவீழ்ந் துழலத்
தெரிந்துங் கடாக்ஷஞ் செய்யாத தென்கொல்
மைந்தர்செய் குற்றந் தந்தையர் பொறுத்தல்
முறைமையென் றறிஞ ரறைகுவ ரதனால்
சிறியேன் செய்த சிறுபிழை யெல்லாம்
பொறுத்து நன்னிலை நிறுத்துக வையா
✓
அத்தனா டம்மை யருட்குரு தெய்வம்
முத்தியென் றெல்லா முழுப்பொரு னீயே
நினையலாற் றெய்வம் நினைக்கவு மறியேன்
பினையொரு தெய்வம் பேசுதற் கியையேன்
தொழுதகு தெய்வ நீயெனத் துணிந்தேன்
எவ்வகைத் துயரு மின்னே தபுக்குதி
வேதமு மறியாச் சோதிவா னவனே
நாதமுங் கடந்த போதவான் கடலே
சின்மயா னந்த நின்மல முதலே
ஆதியு மந்தமு மிலாப்பழம் பொருளே
✓
எங்கு நிறைந்து தங்கிய வியாபி
சச்சிதா னந்த சகளநிஷ் களனே
அருளுக வருளுக வரமெலா மருளுக
அருளுக பதத்துணை யருளுக வருளே.