முருகன் App
முருகேசர் முதுநெறி வெண்பா
இராமலிங்க சுவாமிகள் (சிதம்பரம் ஈசானியமடம்)
காமத்துப்பால்4 / 4
முருகேசர் முதுநெறி வெண்பா · இராமலிங்க சுவாமிகள் (சிதம்பரம் ஈசானியமடம்)

காமத்துப்பால்

109தகையணங்குறுத்தல்✓
ஓகையினு ருக்குமணி யொண்மைகண்டு சூர்கொலெனா
மோகமிக்கான் கண்ணன் முருகேசா — வாகின்
அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.
110குறிப்பறிதல்✓
உற்றபிணி யும்மருந்துங் காசிபனோர்ந் தான்மாயை
முற்றுழிக்கண் ணோக்கின் முருகேசா — பற்றும்
இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
111புணர்ச்சி மகிழ்தல்✓
பூரிளமை யேற்றுவெறாப் போகநனி துய்த்துவந்தான்
மூரி யயாதி முருகேசா — வோரின்
அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.
112நலம்புனைந்துரைத்தல்✓
சந்தமிகு வாலைநலத் தைத்தவவா லன்வியந்து
முந்திமண நேர்ந்தான் முருகேசா — கந்த
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
113காதற் சிறப்புரைத்தல்✓
தேர்ச்சியய னிந்துமதிச் சேர்ந்துழிவாழ்ந் தேமடிவின்
மூர்ச்சித்து மாய்ந்தான் முருகேசா — நேர்ச்சிமிக
வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத
லதற்கன்ன ணீங்கு மிடத்து.
114நாணுத் துறவுரைத்தல்✓
கோளொடுநா ணீத்தகலி கைக்கயர்ந்தான் கோமசுவான்
மூளுறுகா மத்தான் முருகேசா — வாளுறுமக்
காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புணை.
115அலரறிவுறுத்தல்✓
மேயருக்கு மாங்கதனை வெஃகியொரு நாண்முகுந்தை
மூயபழி பூண்டான் முருகேசா — நேயமிகக்
கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.
116பிரிவாற்றாமை✓
அற்றதுணி யோடுதம யந்திபுன லார்ந்துநளன்
முற்றுழியுஞ் சோர்ந்தாண் முருகேசா — பற்றி
அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு.
117படர்மெலிந்திரங்கல்✓
ஆகமெலிந் தாள்சீதை வான்மீகி யாதரித்து
மோகமொடு நாணான் முருகேசா — வேகமிகும்
காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
னோனா வுடம்பி னகத்து.
118கண்விதுப்பழிதல்✓
ஒல்லையிற்கண் ணன்வருங்கொ லென்றயர்ந்தா ருத்தவன்பால்
முல்லைமட மாதர் முருகேசா — புல்லலுறப்
பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்.
119பசப்புறு பருவரல்✓
சீவகனீங் கப்பசந்து சேயிழந்தெய்த் தாள்பதுமை
மூவிலிலா தோங்கு முருகேசா — வோவலிலாச்
சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து.
120தனிப்படர்மிகுதி✓
பற்றி னுருப்பசியைப் பார்த்தன் வெஃகான் சிற்சபையின்
முற்றம்ப மேவு முருகேசா — வுற்ற
ஒருதலையா னின்னாது காமங்காப் போல
விருதலை யானு மினிது.
121நினைந்தவர் புலம்பல்✓
சித்தமுள வல்லமன்சிந் திப்பனோ வென்றுலைந்தாண்
முத்தநகை மாயை முருகேசா — மத்தமுறும்
யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஓ வுளரே யவர்.
122கனவுநிலையுரைத்தல்✓
காதலனை நாளுங் கனவணைந்தே சாரதைதான்
மூதுவகை யுற்றாண் முருகேசா — தீதின்
நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்.
123பொழுதுகண்டிரங்கல்✓
அந்திப் பொழுதின்மணிச் சூடனினை வாலயர்ந்தாண்
முந்துமணி வல்லி முருகேசா — சிந்தைசெயிற்
காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.
124உறுப்பு நலனழிதல்✓
துன்பமுற்றார் தாருவனத் தோகையரெம் மானைவெஃகி
முன்புவளை தோற்றே முருகேசா — வன்பிற்
பண்ணீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
125நெஞ்சொடு கிளத்தல்✓
மெய்த்ததவ வீடுமனை வேண்டியலைந் தேவெறுத் தாண்
மொய்த்தகுழ லம்பை முருகேசா — வுய்த்துணரிற்
காத லவரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் னெஞ்சு.
126நிறையழிதல்✓
போகமுவர்த் தேதவன்விண் போதல்கண்டுங் கௌசிகியின்
மோகமிகச் சென்றாண் முருகேசா — வாகையினாற்
சென்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
யுற்றா ரறிவதொன் றன்று.
127அவர்வயின்விதும்பல்✓
காதலனெந் நாள்வருங்கொ லென்றுதத்தை கவ்வைமிக்காண்
மூதுணர்வாற் றேர்ந்தும் முருகேசா — தீதின்
ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.
128குறிப்பறிவுறுத்தல்✓
தந்தைக் குணர்த்தித் தவன்குறிப்பைக் காந்திமதி
முந்தியுடன் சென்றாண் முருகேசா — வந்தில்
பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
யன்பின்மை சூழ்வ துடைத்து.
129புணர்ச்சிவிதும்பல்✓
செற்ற மிகுபரவை வன்றொண்டர் சென்றவழி
முற்றவறைக் காணாண் முருகேசா — வுற்றவரைக்
காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற்
காணேன் றவறல் லவை.
130நெஞ்சொடு புலத்தல்✓
மேவாக் கணவனைமுன் வெஃகி நளாயனிதான்
மூவாத்துன் புற்றாண் முருகேசா — வோவாமற்
கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.
131புலவி✓
நீளையின்பாற் செல்கெனமா னெஞ்சுயர மாலூடி
மூளஞர்கோட் பட்டாண் முருகேசா — கோளகலும்
உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடல்.
132புலவிநுணுக்கம்✓
இன்பி னெழுமையுநீங் கேனென்னக் காந்திமதி
முன்பு புலந்தாண் முருகேசா — வன்பதனால்
இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
133ஊடலுவகை✓
காதல்குண மாலைபிணக் கைத்தவிர்த்துச் சீவகன்றான்
மோதமிக்கான் கூடி முருகேசா — வாதலினால்
ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின்.