முருகன் App
முருகேசர் முதுநெறி வெண்பா
இராமலிங்க சுவாமிகள் (சிதம்பரம் ஈசானியமடம்)
பொருட் பால்3 / 4
முருகேசர் முதுநெறி வெண்பா · இராமலிங்க சுவாமிகள் (சிதம்பரம் ஈசானியமடம்)

பொருட் பால்

39இறைமாட்சி✓
உற்றபுற வும்புரப்பா னோங்குசிபி தன்னுடல
முற்றுமரிந் தீந்தான் முருகேசா - பற்றும்
முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.
40கல்வி✓
மன்னியின்பந் துய்த்தசங்க வாணர்நக்கீ ரற்பிரிவை
முன்னிமுன்னிச் சோர்ந்தார் முருகேசா - நன்னர்
உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில்.
41கல்லாமை✓
ஈண்டிவச வேசர்முன்னோர்க் கீழழிந்தார் வீண்வாத
மூண்ட மறையோர் முருகேசா - வேண்டுவன
கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
42கேள்வி✓
அத்தனையீ மப்பலியா லர்ச்சித்து வேந்துரையின்
முத்திபெற்றான் சண்டன் முருகேசா - நத்தி
எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு
மான்ற பெருமை தரும்.
43அறிவுடைமை✓
தீதையுன்னி நீங்கினன்சு சீலன் புயபலன்பின்
மூதஞர்கோட் பட்டான் முருகேசா - வோதில்
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்.
44குற்றங் கடிதல்✓
தெய்வநிதி யாதிகவர் தீமையின்ம னோசவன்கான்
மொய்வளந்தோற் றேய்ந்தான் முருகேசா - வுய்யச்
செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.
45பெரியாரைத் துணைக்கோடல்✓
நாரதனாற் சம்வரத நற்றவற்சேர்ந் தேமருத்து
மூரியின்மேம் பட்டான் முருகேசா - பாரதனில்
உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
46சிற்றினஞ் சேராமை✓
வாக்கரசர் சாவகரான் மாழ்கித் தமக்கையான்
மோக்கநிலை பெற்றார் முருகேசா - பார்க்குங்கால்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்.
47தெரிந்து செயல்வகை✓
பாண்டவர்செல் வங்கவர்வான் பண்டுதுரி யோதனன்றான்
மூண்டிழிந்தான் மாய்ந்தும் முருகேசா - வேண்டுங்கால்
எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.
48வலியறிதல்✓
வாரிசுதை வவ்வுமுவ ணத்தையெதிர் வானவர்கண்
மூரியிழந் தெய்த்தார் முருகேசா - தேரின்
உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.
49காலமறிதல்✓
சிந்துபதி யைத்தந்தை யோடிறுத்தான் செவ்வியுற
முந்திவிச யன்றான் முருகேசா - நந்தலின்றி
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.
50இடனறிதல்✓
சென்னியனீ கத்தைமோ திச்சிதைத்த தோர்கோழி
முன்னுறையூர்க் கானின் முருகேசா - மன்னுலகில்
அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
யெண்ணி யிடத்தாற் செயின்.
51தெரிந்து தெளிதல்✓
தீதெனுமி ராக்கதனைத் தேர்மித் திரசகன்றான்
மூதறக்க னானான் முருகேசா - வாதலினால்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.
52தெரிந்து வினையாடல்✓
காண்டலின்றிச் சச்சந்தன் கட்டியங்கா ரற்கரசை
மூண்டளித்து மாண்டான் முருகேசா - வேண்டி
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்.
53சுற்றந் தழால்✓
எய்த்து மகத்திறந்துஞ் சூர னிளையோரன்
மொய்த்தவளம் பெற்றான் முருகேசா - மெய்த்த
விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்.
54பொச்சாவாமை✓
கோடியர்தன் போற்றோன்றக் குன்றிமதர்க் கும்பமுனி
மூடுவெண்ணோ யுற்றான் முருகேசா - நாடுங்கால்
முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
55செங்கோன்மை✓
மைந்தனுய்ந்தான் வற்சமமைச் சோடுமநு நீதிகண்டோன்
முந்தைமுறை தன்னான் முருகேசா - வுந்தும்
இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கு முட்டாச் செயின்.
56கொடுங்கோன்மை✓
வேர்த்திடுக்கண் செய்து விளிந்தான் கருநாடன்
மூர்த்திபான் மேனாண் முருகேசா - கூர்த்துணரின்
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
57வெருவந்த செய்யாமை✓
காத்தகபி லற்கிடும்பை செய்து கணனழிந்தான்
மூத்தோன் மழுவான் முருகேசா - வேத்தும்
இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.
58கண்ணோட்டம்✓
ஓவிலுழ வன்வேண்ட வுக்கிரனா ரிந்திரன் கொண்
மூவைவிடு வித்தார் முருகேசா - தாவலிலாக்
கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா
ருண்மை நிலக்குப் பொறை.
59ஒற்றாடல்✓
பின்னகரம் வீடியபின் பேதுற்றான் சூரனொற்றை
முன்னினிதா ளாமன் முருகேசா - வன்னதனால்
ஒற்றினா லொற்றிப் பொருடெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.
60ஊக்கமுடைமை✓
நாள்களொடு கோளியக்கு நற்பதவி யைத்துருவன்
மூள்கருத்தாற் பெற்றான் முருகேசா - நீள்பெருக்கின்
வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
முள்ளத் தனைய துயர்வு.
61மடியின்மை✓
அம்புவிமுற் றும்புரந்தா னாண்மைரகு மாற்றலரை
மொய்ம்பதனால் வென்றே முருகேசா - விம்பர்
மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு.
62ஆள்வினை யுடைமை✓
ஆள்வினையான் மிக்கதவ மாற்றிச சுவேதமன்னன்
மூள்வினையற் றுய்ந்தான் முருகேசா — கோள்வினையாம்
ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
63இடுக்கணழியாமை✓
செற்றுச் சுயோதனன்செய் தீங்கையின்பிற் றேர்தருமன்
முற்றுமின்பந் துய்த்தான் முருகேசா — பற்றிவரும்
இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்
னொன்னார் விழையுஞ் சிறப்பு.
64அமைச்சு✓
சேக்கிழார் சென்னிக்கத் தொண்டர் சிறப்புணர்த்தி
மோக்கநெறி தந்தார் முருகேசா — வூக்கி
அறிகொன் றறியா னெனினு முறுதி
யுழையிருந்தான் கூறல் கடன்.
65சொல்வன்மை✓
வாதவூ ராளிசெண்டால் வங்கலின்னோர் வன்மையெனா
மோதமிறைக் கீந்தார் முருகேசா — தீதிலதாச்
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து.
66வினைத்தூய்மை✓
வேள்வியிற்கோ லூனுகர்ந்தும் வேடரிற்றாழ்ந் தேழ்மறையோர்
மூள்விதன முற்றார் முருகேசா — நீள்வின்
இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
67வினைத்திட்பம்✓
சீவகன்சீ றாதிருந்தே தெவ்வையழித் தான்முடிவின்
மூவுலகும் போற்று முருகேசா — யாவும்
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி
னெற்றா விழுமந் தரும்.
68வினைசெயல்வகை✓
யாண்டுளனா ராயணனென் றேற்றிரணி யன்மகன்பான்
மூண்டுசின மாண்டான் முருகேசா — வேண்டின்
முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
69தூது✓
தூரனெதிர் தக்கவுரை சொற்றிறுமாந் துற்றகன்றான்
மூரிமிகும் வாகு முருகேசா — வோரின்
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.
70மன்னரைச் சேர்ந்தொழுகல்✓
மன்னனயி ராதுமெல்ல மல்குவித்தார் சைவநெறி
முன்னுவச வேசர் முருகேசா — வின்னதனால்
போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
றேற்றுதல் யார்க்கு மரிது.
71குறிப்பறிதல்✓
இந்தனக்கே லாமரமென் றான்றருமன் வீமனெண்ண
முந்தவையிற் றேர்ந்தே·முருகேசா — மைந்தருள்ளும்
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
72அவையறிதல்✓
சொற்றவிடைக் காடர்கவி தோற்றதுதென் னன்சபையின்
முற்றுசுவை யுற்றும் முருகேசா — வுற்றணுகா
அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
ரல்லார்முற் கோட்டி கொளல்.
73அவையஞ்சாமை✓
தாதையைவெல் வந்திமுனி தன்னையட்ட வக்கிரன்றான்
மூதுணர்வால் வென்றான் முருகேசா — கேதுமிலா
ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
74நாடு✓
எச்சிறப்பேயுந் தென்னிலங்கை வீந்ததர சீனத்தான்
முச்சகமு மேத்து முருகேசா — மெச்சவே
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
75அரண்✓
நம்மரனார் செய்புன் னகையில்வெந்த வேயசுரர்
மும்மதிலு மேனாண் முருகேசா — வம்ம
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
யில்லார்க ணில்ல தரண்.
76பொருள் செயல்வகை✓
மன்னுகிழி பெற்றகுல பூடணனான் மல்கினவே
முன்னுமுற மெல்லா முருகேசா — துன்னியதோர்
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
77படைமாட்சி✓
பற்றுநிரை மீட்டெதிர்த்த பார்த்தனாற் புண்பட்டார்
முற்றினவர் யாரும் முருகேசா — சுற்றி
ஒலித்தக்கர லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.
78படைச்செருக்கு✓
மாலுறுத்தி வீடுமன்பான் மாண்டசிவே தற்கயர்ந்தார்
மோலிபுனை மன்னர் முருகேசா — சாலப்
புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து.
79நட்பு✓
மேவ விதுரமனொடு விண்ணிழந்திம் மண்ணடைந்தார்
மூவரகல் வஞ்சி முருகேசா — தாவில்
அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க
ணல்ல லுழப்பதா நட்பு.
80நட்பாராய்தல்✓
வஞ்சகவா னந்தனட்பாற் சூரியசன் மாவாளா
முஞ்சுமிடர் பெற்றான் முருகேசா — நெஞ்சதனில்
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்.
81பழைமை✓
நம்பனமர்க் கேன்றவா ணற்புரந்தான் றொன்மையுன்னி
மொய்ம்புதொலை யாமன் முருகேசா — வம்புவியில்
பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
82தீநட்பு✓
இன்னலே பல்குநம்பா லென்று விபீடணன்றன்
முன்னவனை நீத்தான் முருகேசா — துன்னிப்
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்ற லினிது.
83கூடா நட்பு✓
நேசன்போற் காடுவெட்டி நேரியன்றென் னற்றழுவி
மோசமே செய்தான் முருகேசா — மாசின்
மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ்
சொல்லினாற் றேறற்பாற் றன்று.
84பேதைமை✓
வேதசன்மா பல்கலையின் மிக்குமுனி வர்ப்பழிப்பான்
மூதரக்க னானான் முருகேசா — காதலினால்
ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்.
85புல்லறிவாண்மை✓
ஓகையினால் வேதா வுரையையுமெள் ளிச்சுதன்மன்
மூகையனாய்ச் சோர்ந்தான் முருகேசா — வாகை
அருமறை சோரு மறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
86இகல்✓
ஆதியையும் வெல்வான் சலந்தரன்சென் றாழியெஃக
மோதமுடி வுற்றான் முருகேசா — வோதில்
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலுங் கெடலு நணித்து.
87பகைமாட்சி✓
நந்தியெதிர் செம்மாந்தே நாகாரி யெஞ்சலிலா
முந்தைவலி தோற்றான் முருகேசா — வுந்தும்
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார்மேன் மேக பகை.
88பகைத்திறந்தெரிதல்✓
ஆர்த்தொரன்பர் புத்தநந்தி யைச்செகுத்தார் சம்பந்த
மூர்த்திதிரு வாக்கான் முருகேசா — சீர்த்திமிகு
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.
89உட்பகை✓
சத்திமுத னூற்றுவர்மாய்ந் தார்விசுவா மித்திரனுண்
மொய்த்தபதை யாலே முருகேசா — வைத்த
அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு
துட்பகை யுற்ற குடி.
90பெரியாரைப் பிழையாமை✓
தெற்றியுதங் கர்கமிழ்தீ யாதுவஞ்சித் திந்திரன்சீர்
முற்றுமிழந் தெய்த்தான் முருகேசா — வுற்றுணரின்
ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
91பெண்வழிச் சேறல்✓
தாசரதி யுஞ்சீதை தன்வழிப்பட் டோர்மானான்
மோசம்போய்ச் சோர்ந்தான் முருகேசா — பேசுங்கால்
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.
92வரைவின் மகளிர்✓
மாழ்கிவரை வின்மகவிற் வஞ்சனையிற் பாட்களன்றான்
மூழ்கியல்லாப் புற்றான் முருகேசர் — வீழ்கும்
பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு
ளாயு மறிவி னவர்.
93கள்ளுண்ணாமை✓
தூயபல பத்திரன்றான் சூதனைமாய்த் தல்லலுற்றான்
மூயமது மாலான் முருகேசா — வாயுங்கால்
துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
94சூது✓
வெகுத்துதாற் றந்தை வெறுக்கக் குணநிதிதான்
முஞ்சினனூண் வவ்வி முருகேசா — துஞ்சும்
அகடாரா ரல்ல லுழப்பர்தூ தென்னு
முகடியான் மூடப்பட் டார்.
95மருந்து✓
சீலமிலாப் பேய்ச்சமணர் சிந்தைநைந்தார் பாண்டியனோய்
மூலமறி யாது முருகேசா — வேலவே
நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
96குடிமை✓
நித்திரையோர்க் கொன்றவசு வத்தாம னீக்கமுற்றான்
முத்தமுனி வோரான் முருகேசா — மெய்த்த
குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.
97மானம்✓
தேசுருவா னின்னிமை தேர்ந்துமா னத்திறந்தான்
மூசுபுகழ்ச் சூரன் முருகேசா — நேசுமிகுஞ்
சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
98பெருமை✓
கும்பமுனி யானகுடன் சர்ப்பவென்றே குண்டலியாய்
மொய்ம்பிழந்து வீழ்ந்தான் முருகேசா — வும்பரினும்
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.
99சான்றாண்மை✓
தொக்கிடும்பை கௌசிகனாற் சூழ்ந்துமரிச் சந்திரன்சொன்
முக்கியமாக் காத்தான் முருகேசா — வக்கணமே
ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்.
100பண்புடைமை✓
ஓவாச் சிவசமய மோங்கியதே நால்வரான்
மூவா முதலே முருகேசா — தாவாத
பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
101நன்றியில் செல்வம்✓
மாழ்கிநிதி நல்காநால் வாணிகர்மான் டார்கடலுண்
மூழ்கிநிதி யோடு முருகேசா — வாழ்வுமிக
ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
தோற்ற நிலக்குப் பொறை.
102நாணுடைமை✓
அந்தணற்கீந் தில்லினைநா ணத்தனன்மூழ் கத்துணிந்தான்
முந்துபத்தி ராயு முருகேசா — நந்தலிலா
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
103குடிசெயல்வகை✓
சத்துருவை மாய்த்தான் பராசரன்றன் சந்ததியை
முத்திபதத் துய்த்தே முருகேசா — மெத்தில்
கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.
104உழவு✓
இன்னலொற்கத் தும்முழவை யேற்றலினீ சற்கமுது
முன்னமைத்தார் மாறர் முருகேசா — வுன்னில்
இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
105நல்குரவு✓
ஆலவா யண்ணறொழும் பைத்தருமி நீங்கவொற்க
மூலமாத் தேர்ந்தான் முருகேசா — ஞாலமிசை
இன்மை யெனவொரு பாவி மறுமையு
மிம்மையு மின்றி வரும்.
106இரவு✓
ஒக்கலைவீட் டிக்களத்தை யோகையினி யற்பகையார்
முக்கணனுக் கீந்தார் முருகேசா — மிக்குவரும்
இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை
துன்ப முறாஅ வரின்.
107இரவச்சம்✓
துன்பகல்வோ மென்று துருபதன்பா லேற்றயர்ந்தான்
முன்பு துரோணன் முருகேசா — வின்பமிக
இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
108கயமை✓
வஞ்சநலன் வாமதே வற்குதவான் வாசியைச்சேய்
முஞ்சியபின் னீந்தான் முருகேசா — வெஞ்சலின்றிச்
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படுங் கீழ்.