முருகன் App
நல்லூர் நாற்பது
வி. கந்தவனம்
வாழ்த்து1 / 4
நல்லூர் நாற்பது · வி. கந்தவனம்

வாழ்த்து

விநாயகர் காப்பு✓
ஐயா திருஞான மெய்யா அணைத்தருளுங்
கையா கணபதியே காத்தருள்வாய் — பொய்தீர்வேல்
நல்லூர் முருகன்றாள் நாற்பதுபா நான்படைக்க
எல்லா நலங்களுமிங் கீந்து.
கலைமகள் வணக்கம்✓
நல்லூரருட் கந்தன்கழல் நானும்நலப் பாட்டால்
எல்லோர்முனும் பாடத்துணிந் தேன்நின்னருள் தேனிங்
கில்லையெனில் இந்நாற்பதை ஏலான்எழில் வேலன்
நல்லாயிருந் தென்னாவினில் நல்காயருள் வாணீ.