முருகன் App
நல்லூர்க் கந்தன் கீர்த்தனைகள்
ந. சுப்பிரமணியம்
1 நல்லூர் வாழ் முருகப்பா1 / 4
நல்லூர்க் கந்தன் கீர்த்தனைகள் · ந. சுப்பிரமணியம்

1 நல்லூர் வாழ் முருகப்பா

இராகம்: சம்க்ரந்தனப்ரியா தாளம்: ஆதி
பல்லவி✓
பால்கொண்டு துதித்தோங்க நூல்கொண்டு உனைப்பாட
மால்கொண்ட மருகாவுன் மயிலதனில் வந்திடுவாய்(பால்)
அனுபல்லவி✓
வேல்கொண்டு சேவல்தன் வியப்பான கொடிகொண்டு
வினைநீக்கி மலம்நீக்கி எனைக்காக்கும் வேலப்பா (பால்)
சரணம்✓
நல்லூரில் நல்லருளை நயமோடு கொடுப்போனே
பல்லாயி ரம்பாவம் பஞ்சாய்ப் பறந்திடவும்
எல்லோரும் இன்புற்று எழிலுடன் வாழ்ந்திடவும்
வல்லமை தருவாயே நல்லூர்வாழ் முருகப்பா (பால்)