முருகன் App
நல்லூர்க் கந்தன் கீர்த்தனைகள்
ந. சுப்பிரமணியம்
2 நல்லை நகரத்தின் கந்தன்2 / 4
நல்லூர்க் கந்தன் கீர்த்தனைகள் · ந. சுப்பிரமணியம்

2 நல்லை நகரத்தின் கந்தன்

இராகம்: கல்யாணவசந்தம் தாளம்: ஆதி
பல்லவி✓
நாவலர் வாழ்ந்த நல்லை நகரத்தின்
ஞானவேற் கரத்தோன் என்கந்தன் (நாவ)
அனுபல்லவி✓
ஆறுமுகா..... ஆறிரண்டு கரத்துடன்
வள்ளிப்பெண் மானுடன் மயில்மிசை வரணும் (நாவ)
சரணம்✓
மாயோன் மருமகன் மலைமகள் தனிமகன்
வேய்குஞ்சரி கன்னியின் காதலன்
ஈசன்மகன்...... ஓங்கிடும் சேவற்கொடியன்
பாசம்வே ரோடற வரந்தர வருவாய் (நாவ)