முருகன் App
நல்லூர்க் கந்தன் கீர்த்தனைகள்
ந. சுப்பிரமணியம்
4 நல்லூர் வதியுங் கந்தனே!4 / 4
நல்லூர்க் கந்தன் கீர்த்தனைகள் · ந. சுப்பிரமணியம்

4 நல்லூர் வதியுங் கந்தனே!

இராகம்: ஹரஹரப்ரியா தாளம்: ஆதி
பல்லவி✓
மலையான் மகளின் மைந்தனே கந்தா
மாசில் நல்லூர் வதியுங் கந்தனே (மலை)
அனுபல்லவி✓
குறவன் மகளாம் கொடிநிகர் வள்ளியைக்
கூடியே களவாய்க் கொண்டநற் குமரனே (மலை)
சரணம்✓
நிலையிலா வுலகில் நீந்தும் எமக்கும்
அலைகடல் நெஞ்சுடன் அலைந்திடும் எமக்கும்
பலபல பாதகம் பண்ணும் எமக்கும்
மலத்தை நீக்கிடும் வழியினைக் காட்டிடும் (மலை)