முருகன் App
நல்லூர்க் கந்தன் கீர்த்தனைகள்
ந. சுப்பிரமணியம்
3 நல்லைநகர் திருமுருகா3 / 4
நல்லூர்க் கந்தன் கீர்த்தனைகள் · ந. சுப்பிரமணியம்

3 நல்லைநகர் திருமுருகா

இராகம்: பாகேஸ்ரீ தாளம்: ஆதி
பல்லவி✓
நம்மவர் மலமற நல்லைநகர்-உள்ள
சிம்மமே போல் திகழும் திருமுருகா குமரா (நம்)
அனுபல்லவி✓
நாடுமன்பர் நெஞ்சில் நலமுடனே-நின்று
பேடுகள் இருவருடன் கூடிவரும் குமரன் (நம்)
சரணம்✓
ஆறுமுகன் முருகன் அரிமருகன்-குகன்
வீறுகொண்ட வேலேந்தும் வேல்முருகன்
ஆறுதல் அளிக்கின்ற அறிவழகன் அன்பன்
நாறுமலர் சூடும் ஞானியவன் நண்பன் (நம்)