முருகன் App
சேவல்விருத்தம்
அருணகிரிநாதர்
அச்சப்படக்குரல்4 / 11
சேவல்விருத்தம் · அருணகிரிநாதர்

அச்சப்படக்குரல்

4✓
அச்சப்ப டக்குரல் முழக்கிப் பகட்டியல
றிக்கொட்ட மிட்டம ரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறுகுழை களைக்கொத் தியே
பிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக்கொக் கரித்து வருமாம்
பொய்ச்சித் திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத் தயில்விடும்
புத்திப்ரி யத்தன்வெகு வித்தைக் குணக்கடல்
புகழ்ச்செட்டி சுப்ர மணியன்
செச்ைப் புயத்தன்நவ ரத்னக்ரி டத்தன்மொழி
தித்திக்கு முத்த மிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
சேவற் றிருத்து வசமே.