முருகன் App
சேவல்விருத்தம்
அருணகிரிநாதர்
வந்து ஆர்ப்பரிக்கும்8 / 11
சேவல்விருத்தம் · அருணகிரிநாதர்

வந்து ஆர்ப்பரிக்கும்

8✓
வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன்
வலியதூ துவர்ப்பில்லி பேய்
வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட
வாயினும் காலினாலும்
பந்தாடி யேமிதித் துக்கொட்டி வடவைசெம்
பவளமா கதிகாசமாப்
பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்
பார்த்தன் புறக்கூவுமாம்
முந்தா கமப்பலகை சங்காத மத்தர்தொழ
முன்பேறு முத்தி முருகன்
முதுகா னகத்தெயினர் பண்டோ டயிற்கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு
சித்தர்க் கிரங்கறுமுகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன்முடி குற்றி
சேவற் றிருத் துவசமே.