முருகன் App
சேவல்விருத்தம்
அருணகிரிநாதர்
பூவிலியன் வாசவன்11 / 11
சேவல்விருத்தம் · அருணகிரிநாதர்

பூவிலியன் வாசவன்

11✓
பூவிலியன் வாசவன் முராரிமுநி வோரமரர்
பூசனைசெய் வோர்மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆடஅமு தூறஅநு
போகபதி னாலுலகமும்
தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தானதவ நூல்தழையவே
தாள்வலிய தானபல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரற்பயிலுமாம்
காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழைகமு
காடவிகள் பரவுநடனக்
காரணமெய்ஞ் ஞானபரி சீரணவ ராசனக்
கனகமயில் வாகனனடற்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருகமுகச்
சீதள குமாரகிரு பாகர மனோகரன்
சேவற் றிருத் துவசமே.