முருகன் App
சேவல்விருத்தம்
அருணகிரிநாதர்
எரியனையவியன்2 / 11
சேவல்விருத்தம் · அருணகிரிநாதர்

எரியனையவியன்

2✓
எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்
கரத்தடர்த் துக்கொத் துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர்கிடு கிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய
சரணஅழ கொடுபுரி யும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவற் றிருத்து வசமே.