முருகன் App
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்
சங்கரன் தனக்குமிக2 / 5
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்

சங்கரன் தனக்குமிக

2✓
சங்கரன் தனக்குமிக உபதேசம் சொல்லியே
சகலருக் கமுத மீந்தாய்
சாட்சாதி வேடர்மகள் வள்ளியின் கொல்லையில்
தனிவேங்கை மரமு மானாய்
எங்கும்புக ழாகவே அசுரரைச் சம்மரித்து
இந்திரனுக் குதவி செய்தாய்
ஏகாந்த மாகவே தென்பழனி புரியினில்
இடர்தீர்க்க வந்த முருகா
மங்கள கரமான தணிகைதிருப் போரூரில்
வாழ்மயிலந் தனில மர்ந்தாய்
மனுநீதி தவறாத கோடானு கோடிபேர்
வணங்கினோர்க் குதவி செய்தாய்
தத்திரெ … ரனைத் துளைத்துநீ அமர்செய்த
தயாடர மான துரையே
தகதகென மயிலேறி திருநடனம் ஆடிவரும்
தணிகாச லக்கடவுளே.