முருகன் App
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்
திருவளரும் சென்னைபுரி1 / 5
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்

திருவளரும் சென்னைபுரி

1✓
திருவளரும் சென்னைபுரி தெய்வப் பிரகாசனே
சிவகாமி தவப்புதல்வனே
சிங்கார வேலனே கதிர்காமத்தையனே
தெய்வானை குணநேயனே
மருவுமலரணிகின்ற வள்ளிக் குகந்தநல்
வையாபுரித் தலைவனே
மயிலேறும் வீரனே தூயம் மாரனே
மாயவன் நல்மருகனே
தருவிற் பழுத்தகனிக் காகவொரு நொடியிற்பூ
வலம்வந்த சம்மாரனே
சங்கரி கொடியிட தலத்தினா லுதித்திடும்
சரவண குருகந்தனே
அருமையுடன் வருகுவாய் மயிலேறும் ஐயனே
கதிர்காம முத்தையனே
ஆறுமுக மானதிரு நீறுவொளி யானவருள்
ஆறுமுக மான குருவே.