முருகன் App
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்
வேலும் அசைந்தாட5 / 5
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்

வேலும் அசைந்தாட

5✓
வேலும் அசைந்தாட வீரகிண் கிணியாட
வெண்டையங் குலுங்கி யாட
விதமான காலினிற் தண்டைச் சிலம்பாட
வேதாந்த குடைக ளாட
நாலுமறைகள் பாடக் கோழித் துவசமாட
நாதாந்தப் பொருள்க ளாதி
நாகரீகமான வீரகெண்டாமணி
நடனமிடு மயில்க ளாட
பாலர்கள் காவடிகள் கொண்டு புகழ்ந்தாட
பத்தர்கள் நடன மாட
பாங்கான காவிநீர் உடையாட சித்தர்கள்
பணிந்து நிர்த்தனங்க ளாட
ஆலத்தை உண்டவன் புத்திரனே சமரபுரி
ஐயனார் வருக வருக
ஆறுமுக மானதிரு நீறுவொளி யானவருள்
ஆறுமுக மான குருவே.