முருகன் App
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்
தந்தைதாய் தெய்வமும்4 / 5
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்

தந்தைதாய் தெய்வமும்

4✓
தந்தைதாய் தெய்வமும் நீயேகதி யல்லாமல்
தற்காக்க ஒருவ ரில்லை
தயிரியம் சொல்லவும் தாபமது தீர்க்கவும்
தரணியில் எவரு மில்லை
சந்ததமும் நால்வேதம் உன்னையே புகழ்ந்து
சரணாகதி யென்ற வர்க்கு
சாலோக சாமீப சாரூப மேலான
சாயுச்சியந் தந்த குருவே
வந்தனம் செயுமுனது அன்பர்க் கிரங்கிநீ
வண்மையுடன் வரமளிப்பாய்
வள்ளி தெய்வானையுடன் வாழுமயி லேறியே
வரவேண்டு மெந்த னருகே
தந்திர மிகுந்திரு மாயனிட மருகனே
தற்பரா நந்த பரனே
தகதகென மயிலேறி திருநடன மாடிவரும்
தணிகாச லக்கடவுளே.