முருகன் App
குன்றக்குடிப் பதிகம் 1,2,3
தண்டபாணி சுவாமிகள்
குன்றக்குடிப் பதிகம் - 2: நூல்4 / 5
குன்றக்குடிப் பதிகம் 1,2,3 · தண்டபாணி சுவாமிகள்

குன்றக்குடிப் பதிகம் - 2: நூல்

1அறுசீர்த் தாழிசை✓
பொன்மயல் கொண்டுதெ ருத்தொறும் ஊர்தொறும் போகா துணைநாடி
நன்மகிழ் வெய்திநின் ஆறெழுத் தேமிக நவிலப் பெறுவேனோ
பன்மறை யும்புக ழும்குரு வே!மயிற் பரியேறி நடாவும்
கொன்மலி யும்குக னே!வள மேவிய குன்றக் குடியானே.
2✓
அற்ற மறிந்து(உ)த வத்தகும் நின்னருள் அதையே கருதாமல்
மற்றதை யும்பொரு ளாமென நாடிடும் மடமென் றொழிவேனோ
பற்றலர் அஞ்சிவ ணங்கிடக் கூவிய பறவைக் கொடிவாழ்வே!
குற்றமி லார்பர வும்புகழ் தோய்தரு குன்றக் குடியானே.
3✓
எங்கும்உன் அன்பன் எனப்பல ரும்புகழ் இயல்புற் றும்என்நெஞ்சம்
பொங்குமி டிக்கென லால்மிக வாடிடப் போமே? அருள்பொய்யோ
சங்குபு னைந்தொளிர் காதுடை யான்விழி தருசண் முகநாதா!
கொங்கும லர்ப்பொழி லால்முகில் ஓவரு குன்றக் குடியானே.
4✓
காலன்வ ரும்கொடி தெண்ணுகி லாரது கைப்புன் பொருள்நாடிச்
சாலவ ருந்தவி டுத்தனை யே?இது துதிஎன் றறியாயோ?
மாலவ னும்புக ழப்பொரும் வேல்புனை வலிமைக் குகவேளே!
கோலம றைத்திரள் ஒலிட நீடிய குன்றக் குடியானே.
5✓
அன்றுது யின்றிடும் வேளையில் வந்தெனை அருணைக் கிளிதான்நீ
என்றுப கர்ந்தனை, இப்படி விட்டிடல் இயல்பாம் எனலாமோ?
நன்றுமி குந்துதி பாடிய கீரனை நலியா தருள்செய்தாய்!
குன்றுதொ றாடலின் முந்திய தாகிய குன்றக் குடியானே.
6✓
இச்சைவ ழிப்படும் என்னையும் நின்னருள் எய்தும் பெரியோர்போற்
பிச்சைய ருந்திமு ழுத்திரு நீறணி பீடுற்றி டவைத்தாய்!
செச்சைம லர்ப்புரை யுந்தமிழ் பாடிய திறலா ளர்கள் மிகையாற்
கொச்சைய ற்கிளி பேசிய சீர்திகழ் குன்றக் குடியானே.
7✓
சிட்டர்த மக்குற வாகியுன் அன்பர்கள் செப்பா நெறிசெல்லும்
துட்டர்த மைக்கறு வம்பெரி யோர்அடித் துகள்து டுதல்வம்போ?
மட்டவிழ் நீபம லர்ப்புய னே!எழில் மான்தோற் பறைவேடர்
கொட்டவி ளங்குகு றிச்சியுட் சீரிய குன்றக் குடியானே.
8✓
காழிந கர்ப்புல வோன்திக ராமொரு கவிநா யகன்வந்திங்(கு)
ஏழிசை யிற்றமிழ் பாடிடும் நாள்வரில் என்நெஞ் சமையாதோ!
தோழிய ரோடுறும் வேடமி னாள்அடி தொட்டுப் பணிவோனே!
கோழிவ ரைந்தகொ டிக்கழ காம்உயர் குன்றக் குடியானே.
9✓
சஞ்சல முற்றுவ ணங்கிய வானவர் தம்மூர் மகிழ்வெய்த
வஞ்சம னத்தின னாகிய சூரனை வதைசெய் தனையன்றோ?
நஞ்சம யின்றவ னுக்கொரு மெய்ப்பொருள் நல்கும் குருநாதா!
குஞ்சரி பாகம்இ ருப்பவ னே!எழிற் குன்றக் குடியானே.
10✓
ஆடையெ னப்புலித் தோலையு டுத்தவன் ஐந்தா யுதம்வைத்தோன்
மாடைநி றத்தயன் என்றொரு மூவர்கள் வாழ்வும் தருவாயோ?
ஓடைவ ழிக்கொடு மத்தக மீதிழி வுறுமா மதவேழம்
கோடையி டித்தொனி நாணமு ழங்கிய குன்றக் குடியானே.
11✓
எந்தவ கைச்சம யத்தினும் அங்கவர் எண்ணும் குருவாகி
அந்தநெ றிக்குள்மு டித்தமு டிப்பினை அருள்கின் றனையன்றோ?
கந்தம லர்க்கம லத்தினும் அன்றுறை கருணா கர!முருகா!
கொந்தலர் குல்லைமு டித்தவ னே!நெடுங் குன்றக் குடியானே.
12✓
கும்பமு னிக்கரு ளும்பெரி யோனெனும் குன்றக் குடியானைச்
செம்பது மத்தினள் வாழும்நெல் வேலியிற் சிறுவன் பகர்பதிகம்
தும்பம னத்தின மும்பகர் கின்றது தவமா முயல்வாரைக்
கம்பலை முற்றும்இ ருப்பிட மாகிய கலிநோய் அணுகாதே.