முருகன் App
மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனைகள்
வீ.சீ. கந்தையா
சொந்தம் உனையலாது துணை எது முருகா4 / 5
மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனைகள் · வீ.சீ. கந்தையா

சொந்தம் உனையலாது துணை எது முருகா

இராகம்- ரஞ்சனி தாளம்- ஆதி
பல்லவி✓
மண்டூர்ப் பதியில் உறை வள்ளி மணவாளா
வண் தமிழ்க் குமரா நீ வருக முருகா
அனுபல்லவி✓
பண்டைத் தலங்களிலே
பார்புகழ் நின்பதிகள்
கண்டும் மனம் அடங்கேன்
கடம்பா முருகா (மண்டூர்ப்பதியில்
சரணம்✓
தந்தையும் தாயும் நீ சற்குரு நாதனே
தனி முதலானவன் நீ சரவணபவனே
பந்த மறுத்தருள் வாய் பாசம் களைந்திடுவாய்
சொந்தம் உனையலாது துணை எது முருகா(மண்டூர்ப்பதியில்)