முருகன் App
மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனைகள்
வீ.சீ. கந்தையா
சோதி மண்டூருறை துணைவன்2 / 5
மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனைகள் · வீ.சீ. கந்தையா

சோதி மண்டூருறை துணைவன்

இராகம்- சாமா தாளம்- ரூபகம்
பல்லவி✓
வேல் முருகையா - உன்
தாள் துணை ஐயா - மண்டூர்
அனுபல்லவி✓
சூழ்வினை அகல துன்பங்கள் விலக
சோதி மண்டூருறை துணைவன் நீ ஐயா(வேல் முருகையா)
சரணம்✓
கண்ணொடு மனமுமுன்
கழல்களில் வைத்தேன்
காப்பதுன் கடனென்று
கரங்கள் குவித்தேன்
பண்ணொடு உன் புகழ்
பாடித் துதித்தேன்
பாமரன் நான் எம
பயத்தினை ஒழித்தேன். (வேல் முருகையா)