முருகன் App
மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனைகள்
வீ.சீ. கந்தையா
தில்லை மண்டூர் முருகன்1 / 5
மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனைகள் · வீ.சீ. கந்தையா

தில்லை மண்டூர் முருகன்

இராகம்- கரகரப்பிரியா தாளம்- ஆதி
பல்லவி✓
சொல்வாய் இளங்கிளியே - ஒருமுறை நீ
சொல்வாய் இளங்கிளியே
அனுபல்லவி✓
தில்லை மண்டூர் முருகன்
திருப்பெயர் தன்னை இன்று
வள்ளி மணாளன் மயில்
வாழ் முருகேசன் என்று (சொல்வாய்)
சரணம்✓
செந்நெற் கழனி சூழும்
தில்லை மண்டூர் வளரும்
மன்னன் அடியர் துயர்
மாற்றும் செவ்வேலனை நீ
கன்னித் தமிழ் முருகன்
கதிர்வடி வேற்குமரன்
இன்னல் களைந் தன்பர்க்(கு)
இன்பம் அளிப்போனென்று (சொல்வாய்)