முருகன் App
மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனைகள்
வீ.சீ. கந்தையா
தில்லை மண்டூர் வளரும் செல்வன்3 / 5
மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனைகள் · வீ.சீ. கந்தையா

தில்லை மண்டூர் வளரும் செல்வன்

இராகம்- ஆரபி தாளம்- ஆதி
பல்லவி✓
தில்லை மண்டூர் வளரும்
செல்வக் குமரனருள்
செப்புக நன்மனமே - தினமே
அனுபல்லவி✓
வள்ளி மனம் புணரும்
வள்ளலருட் குமரன்
புள்ளி மயிலில் வரும்
போதாந்த நாதனென்று
சரணம்✓
செல்வக் கதிரை நகர்
தில்லை மண்டூ ருனக்கு
சீவன் முத்தி அருள்
செல்வ முரித்துனக்கு
நல்லை நகர் வளரும்
நல்ல துணைவன் என்று
நானுனைத் தேடி வந்தேன்
நாயகன் நீதானென்று (தில்லை மண்டூர்)