முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல்
க. மயில்வாகனப் புலவர்
எச்சரிக்கை3 / 5
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல் · க. மயில்வாகனப் புலவர்

எச்சரிக்கை

1இராகம்: சாவேரி தாளம்: உருபகம்✓
உலகோர்முதற் றொழுவாரண னுடனேபிறந் தவனே
புலவோர்துதி மயிலைப்பதிப் புலவாவெச் சரிக்கை.
2✓
வரைமாதர னிருவார்விழி மணியேபெரு மணியே
நிரையார்தரு மயிலைப்பதி நிமலாவெச் சரிக்கை.
3✓
தொடுமாகட லலைநீர்நனி சுவறாவலி குறைய
விடுவேலவ மயிலைப்பதி விமலாவெச் சரிக்கை.
4✓
தொடியார்பிடி மடவாள்சுகந் தோயும்மண வாளா
கொடியார்மதின் மயிலைப்பதிக் குழகாவெச் சரிக்கை.
5✓
குறமாதெனு மொருபூங்கொடி குலவிப்படர் தாரு
அறனார்தரு மயிலைப்பதி யமலாவெச் சரிக்கை.
6✓
வானார்மலை யோடேகரி வதனன்றனை வாட்டுங்
கானார்மலர் மயிலைப்பதிக் கரியேயெச் சரிக்கை.
7✓
கடல்போற்றுயர் சுரர்மேற்செயுங் காலன்நிகர் சிங்கன்
திடனேயழி மயிலைப்பதிச் சிங்கேறெச் சரிக்கை.
8✓
கணியாவுல கழியாவுடற் கதியாவரு சூரற்
றுணியாவழி மயிலைப்பதிச் சூராவெச் சரிக்கை.
9✓
மயில்வாகன மொருவாரண மணிநீள்கொடி யுடையோய்
குயில்வாழ்பொழின் மயிலைப்பதிக் குமராவெச் சரிக்கை.
10✓
கடம்பார்மலர்த் தடந்தோளெனுங் கவினார்மலைக் குகனே
இடம்பாவிய மயிலைப்பதி யிறைவாவெச் சரிக்கை.
11✓
அணியார்மணி நவவீரர்க ளரசேசுரர் பரசிப்
பணிவோய்புகழ் மயிலைப்பதிப் பரமாவெச் சரிக்கை.
12✓
குணமாமலை யருண்மாமுகில் கொடியேன்வினை மருந்து
வணமேவிய மயிலைப்பதி வரதாவெச் சரிக்கை.
13✓
மணியேசுவைக் கனியேதெளி மதுவேபுனக் கணியே
பிணியேயொழி மயிலைப்பதிப் பெருமானெச் சரிக்கை.
14✓
மயலைக்கெடுத் தருளைத்தர மருவித்தலம் வதியும்
மயிலைப்பதிச் சிவசுப்பிர மணியாவெச் சரிக்கை.