முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல்
க. மயில்வாகனப் புலவர்
மங்களம்5 / 5
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல் · க. மயில்வாகனப் புலவர்

மங்களம்

இராகம்:சௌராட்டிரம் தாளம்:ஆதி
பல்லவி✓
சீராருங் கந்தனுக்குச் செயமங்களம் எங்கள்
சிவசுப்ர மண்யனுக்குச் சுபமங்களம்
அனுபல்லவி✓
ஆதிதரும் பாலனுக்கும் ஆறுமுக வேலனுக்கும்
நீதிநிறை சீலனுக்கும் நேரரிய கோலனுக்கும். (சீ)
சரணங்கள்✓
பத்தர்மனத் தையனுக்கும் மெய்யனுக்கும் மங்களம்
பங்கமிலாத் துய்யனுக்குஞ் செய்யனுக்கும் மங்களம்
அத்தியுடன் வந்தவற்கும் அசுரகுல வந்தகற்கும்
சத்தியுமை தந்தவற்கும் சரணார விந்தனுக்கும். (சீ)
✓
புள்ளிமயில் வாகனனுக்கும் ஏகனுக்கும் மங்களம்
பொங்குமுப வீதனுக்கும் நாதனுக்கும் மங்களம்
வள்ளிமண வாளனுக்கும் மன்னுகுண வாளனுக்கும்
துள்ளுசுத ராளனுக்கும் தொங்குமலர்த் தோளனுக்கும். (சீ)
✓
நன்மைதரு சித்தனுக்கும் முத்தனுக்கும் மங்களம்
நாரசிங்கன் மருகனுக்கும் முருகனுக்கும் மங்களம்
தன்மமறை யீசனுக்கும் தங்கியொளிர் தேசனுக்கும்
தென்மயிலை வாசனுக்கும் தெய்வானை நேசனுக்கும்.