முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல்
க. மயில்வாகனப் புலவர்
பராக்கு4 / 5
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல் · க. மயில்வாகனப் புலவர்

பராக்கு

1இராகம்: புன்னாகவராளி தாளம்: ஜம்பை✓
தேவாதி தேவனரு டேவேப ராக்கு
சித்தியொடு முத்தியருள் செல்வாப ராக்கு
பாவாண ரேத்துமொரு பாலாப ராக்கு
பத்தர்மன நித்தமுறை பண்போய்ப ராக்கு.
2✓
கும்பமுனி தேறவருள் குருவேப ராக்கு
கோலமலர் வெட்சியணி கோவேப ராக்கு
நம்பர்பெறு மந்த்ரகுரு நாதாப ராக்கு
நங்கையுமை தந்ததிரு நந்தாப ராக்கு.
3✓
தெள்ளுபுனல் வாவிவரு சேயேப ராக்கு
சேவன்மயில் வேலுடைய செவ்வேள்ப ராக்கு
வள்ளிசுர யானைமண வாளாப ராக்கு
மயிலைவதி சிவசுப்ர மண்யாப ராக்கு.