நல்லை வெண்பா
யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்
நான்மொழிச் சிலேடை4 / 5
நல்லை வெண்பா · யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்
நான்மொழிச் சிலேடை
73✓
வார்காட்டும் பொற்குடத்தார் வாய்நகை கைகொந்தளமுங்
கார்காட்டப் பீலிமகிழ் காநல்லை - வார்கோட்டுத்
தானமுறக் காதினான் றானவவே தண்டமுட
னீனமுறக் காதினா னில்.
74✓
பூம்பா சிளங்கமுகின் றண்பாளை பொன்னிரத
வாம்பா டலக்குளையா மாநல்லை - தீம்பனச்சூர்
பட்டிகுடித் தேவனிலை பாடழிக்கும் வைவேலோ
னெட்டிகுடித் தேவ னிடம்.
75✓
மாலவளர்வா னொச்சிசூழ் வாரிமணிக் கோட்டத்தா
னாலுதிணை யும்பொருந்து நல்லூரே - நாலாகுந்
தேன்சிலம்பு மட்டார் திருக்கடம்பர் சீருறைவாய்
வான்சிலம்பு மட்டார் வழி.
76✓
வாரிக்கு நேராலை மண்டொலிபோ யெண்டிசையும்
வாரிக்கு நேராய் வளர்நல்லை - யோரியினங்
கந்தருவ மேவினார் காதலர்மான் கன்னிமணங்
கந்தருவ மேவினார் காப்பு.
77✓
வாதா யனமனையார் வாண்முகத்தால் வான்மதியை
வாதா யனஞ்சயங்கொண் மாநல்லை - பூதியமார்
கண்டங் கரியான் வலவனய னுய்யவே
கண்டங் கரியான்சேய் காப்பு.
78✓
கன்னிமணி வாழை கனங்குலையாற் காய்கதிரோ
னுன்னியுட னட்பா முயர்நல்லை - பன்னோ
ருருத்திரமா னத்துப்பா ரோங்கயிலார் காம
ருருத்திரமா னத்துப்பா ரூர்.
79✓
எண்கோட் டகத்து மெழின்மலர்ப்பூங் கோட்டகத்துந்
தண்கோட் டலவன் றவழ்நல்லை - வெண்காட்டு
ளாடி முருகா ரடியவர்க்குக் காட்சிதரு
மாடி முருகா ரகம்.
80✓
தானமருண் மாவுந் தரணிபரும் வானவர்போற்
றானம் பொருந்துந் தனிநல்லை - தேன்வனத்தார்
மன்பர சுந்தரத்தார் வள்ளிசுர வேழஞ்சேர்
மன்பர சுந்தரத்தார் வாழ்வு.
81✓
கீதவிசை யால்வெடிபோய் நீள்கிடங்கின் மீள்வாளை
சீதமுனி போலுந் திருநல்லை - யோதமர
ரிட்ட விலங்கறுத்தா னெல்லரியவ் வான்வரை
யிட்ட விலங்கறுத்தா னில்.
82✓
சுருதி யிசைவிதிசேர் வாணிமினார் சூழ்வாற்
பிரம பதம்போலும் பேர்நல்லை - யருளியமா
தாவ மலையகத்தான் றாரகத்தான் வேங்கடமாந்
தேவ மலையகத்தான் சேர்வு.
83✓
பணியணைநன் மாதவராற் பாரெண் பொறியான்
மணிவளர்வை குந்தநேர் நல்லூர் - திணியசுர
வன்பர்க் கருள்வா னிசைபுலர வான்விபுத
வன்பர்க் கருள்வா னகம்.
84✓
பாரிடத்தர் போற்றும் பதியகமாம் பண்பினாற்
றாரவரை போலுந் தனிநல்லை - யாரணம்சேர்
புள்ளூர்முத் தையனலப் பொற்பா னரிபரவும்
புள்ளூர்முத் தையன் புரம்.
85✓
சீரரச கேசரிமுன் னாகுந் திறலாண்மைப்
பாரரசர் போற்றும் பதிநல்லை - காரிகையார்
தாராதா ரக்களத்தன் றந்தமட வார்புனையுந்
தாராதா ரக்களத்தன் சார்பு.
86✓
படைமடத்தை நீங்கினார் கற்றார்பன் னூலுங்
கொடைமடத்தர் வாழ்வுகூர் நல்லூர் - விடமடைத்த
கந்தரத்தர் செம்மலருட் காங்கேயர் வேலுகந்த
கந்தரத்தர் செம்மல் களம்.
87✓
ஐயமினார் சிற்றிடையே யன்றி யெவரிடத்து
மையமெனார் வாழு மணிநல்லை - பையரவை
வாட்டுமொக ரத்தன் மகரவரை மாத்திரைசேர்
நீட்டுமொக ரத்த னிலம்.
88✓
பொங்காழி மாலெதிரப் பூங்குழலார் பொன்னுடனே
சங்காழி தாங்குந் தனிநல்லை - வெங்காளி
நாடகமு னாடினார் நந்தர்மா தைப்புனமே
னாடகமு னாடினார் நாடு.
89✓
வாரிசமி னன்னார் நகைநிலவான் மைந்தருள
வாரிசங்கள் விள்ளு மணிநல்லை - யூர்க
வனப்புரு வைப்பரித்தார் செச்சையர் மாவேட
வனப்புரு வைப்பரித்தார் வாழ்வு.
90✓
சாலகத்தார் மந்தாரஞ் சாலகத்தார் மெல்லியர்க்குச்
சாலகத்தா னல்குந் தனிநல்லை - மேலரண்மே
லுந்துஞ் சரவணத்தா னும்பருய மகவாய்
நந்துஞ் சரவணத்தா னாடு.
91✓
கட்டேற லாரறுகால் காவியுடன் கன்னியர்தங்
கட்டேற லாவயல்சூழ் காநல்லை - கட்கமொளி
வட்டங் கழுக்கடையார் நாயகவை வேலர்பொய்
யுட்டங் கழுக்கடையா ரூர்.
92✓
முத்திபதந் தங்களினேர் மூரலம்மத் தார்மயறீர்
முத்திபதந் தந்தருண்முத் தையனிட - முத்தம்
பலவலஞ்சூ ழில்லார் பவனம் பழனம்
பலவலஞ்சூழ் நல்லைப் பதி.
93✓
வில்லிரவி மேலோங்கும் பொன்காப்பு வெண்காப்பால்
வில்லிரவி போலும் வியனல்லை - நல்லிரவிற்
கானவரை யுற்றா ரெனக்கவர்ந்த கன்னியுடன்
கானவரை யுற்றார் களம்.
94✓
அகங்காரங் கோவாதி சீர்நிலையா னென்னு
மகங்காரந் தீர்த்தருளு மையன் - குகன்கோயில்
பூவுலகுங் கீழ்மேல் பொருந்துலகு நாலிரண்டா
மாவுலகும் வாழ்த்தியநல் லூர்.
95✓
அன்ப ரகத்தளையு மாயர் சிறாருளையு
நன்களையு முத்தங் கொளுநல்லூர் - பொன்குலவு
வத்திரங்க ளைந்தான் மகனசுரர் கொண்டவிய
வத்திரங்க ளைந்தான் வலம்.
96✓
பாரியரி சந்தனங்கொள் பண்பினரா லேற்பவரும்
பாரியரி சந்தனங்கொ ணல்லூரே - பாரி
வருஞ்சயந்த னத்தான் மகன்றருவி னீழல்
வருஞ்சயந்த னத்தான் வழி.
97✓
சலமிலர்கோள் வஞ்சங் கரவு தவிர்ந்தார்
நலமியல்பார் வாழ்வுகூர் நல்லூர் - பொலியு
மிருவாலை பாகனைய தோளினிய சொல்லா
ரிருவாலை பாக னிடம்.
98✓
சீரியபொன் மின்னுகந்த மாதனமுள் ளார்செறிவா
னேருந் திருச்செந்தூர் நீணல்லை - பூருக்
கனவிலஞ்சே லென்றாருங் கட்சுந் தரிசேய்
கனவிலஞ்சே லென்றார் களம்.
99✓
தவருந் தனிமா தவரும் பதுமத்
தவருந் தவமகிழு நல்லூர் - தவருஞ்
சலதரமு மாகநின்றார் தன்மையர்வை வேலார்
சலதரமு மாகநின்றார் சார்பு.
100✓
தன்மங் கலமெனக்கொள் சால்பினர்மெய்ச் செல்வர்சேர்
நன்மங் கலஞ்சிறந்த நல்லூரே - பொன்மலியுந்
தாம மதலையார் தன்னடியா ருய்யவருள்
சேம மதலையார் சேர்வு.