ஏதுமறியேன் ஒன்று இணக்கமறியேன் சற்றும்
இணையடிகள் போற்ற அறியேன்
எத்தேச காலமும் பக்தர்களைப் பூசித்து
இணக்கத்துடன் தொழுதுமறியேன்
நீதியறியேன் சுத்த நிட்டையறியேன் சற்றும்
நிலைகண்டு புகழஅறியேன்
நெடுநாளாய் உன்கோயில் வலமாக வந்துநான்
நின்று பூசித்துமறியேன்
வேத மறியேன் நூல்விளக்க மறியேன் பூரண
வேதாந்த முடிவுமறியேன்
வினைசெய்த பாவிக்குத் துணையாக நீவந்து
வேண்டின வரந்தருகுவாய்
ஆதிவடிவே ராச யோகவடிவே நித்திய
அருளமுத மான வடிவே
ஆறுமுக மானதிரு நீறுவொளி யானவருள்
ஆறுமுக மான குருவே.