முருகன் App
தணிகாசலப் பஞ்சரத்தினம்
ஏனோதான் நான்செய்த4 / 5
தணிகாசலப் பஞ்சரத்தினம்

ஏனோதான் நான்செய்த

4✓
ஏனோதான் நான்செய்த பாவவிதி கர்மமோ
எளியனிட நோன்பு பலனோ
எண்ணாமல் முன்னோரைப் பேசின கர்மமோ
எளியோரைப் பழித்த விதமோ
தானாக பூமியில் வழக்கோரஞ் செய்தேனோ
சத்ராதி கோப முறையோ
தாரணியில் கவிபாடு புலவரைத் தடுத்தேனோ
தாய்க்கு என்பழி செய்தேனோ
…………………………………………
மங்கையர்கள் தாபமிதுவோ
பாராமல் முன்செய்த பாவத்தை நீக்கியே
மைந்தர்க்கு வரந்தருகுவாய்
ஆனாலும் எங்கள்முன் வருகுவாய் மயிலேறும்
ஐயனே கதிர்வேலவா
ஆறுமுக மானதிரு நீறுவொளி யானவருள்
ஆறுமுக மான குருவே.