நஞ்சுண்ட பரமகுரு வானதொரு தெய்வமே
நாதனே குமரர் குருவே
நாயகா உனைவிட வேறுதுணை இல்லைஎனை
யாதரிப் பவரு மில்லை
பஞ்சையாம் நானென்ன பாவங்கள் செய்தனோ
பரதவித் திடவு நீதான்
பாரா திருப்பதும் தர்மமோ உந்தனைப்
பார்த்தவர்கள் ஏசார்களோ
கொஞ்சமென் றென்னைநீ விட்டு விட்டாலும்
குழந்தை நான் விடுவ தில்லை
கோபமோ என்மீதில் தாபமோ என்செய்வேன்
கொத்தடிமை கொண்ட முருகா
தஞ்சமென் றேயுனைக் கெஞ்சியே வருந்திடத்
தற்காத் தருள்புரிகுவாய்
தகதகென மயிலேறி திருநடன மாடிவருந்
தணிகாச லக்கடவுளே.