சீர்புகழும் சென்னைபுரி திருவல்லிக் கேணிநகர்
செங்குந்தர் வீதிவாழும்
சிவனருள் பாலனே சிவசுப்ரமணியனே
சிவகாமி தவப்புதல்வனே
கார்புகழும் போரூரில் சூரர்குலம் வேரறக்
கண்டித்த கதிர்வேலனே
கனகமயி லேறிவரும் தெய்வானை பாகனே
கன்னி வள்ளி நாயகனே
பார்புகழும் உன்அன்பர் உளங்களித் திடவந்து
பன்மைவரந் தந்த பரனே
பஃகயன் சிறைமீட்டு வைத்ததொரு பாகனே
பழனிமலை வடிவேலனே
தார்புகழும் மாயனிட தங்கையுட மைந்தனே
சனகன்மகட் பதிமருகனே
தகதகென மயிலேறி திருநடன மாடிவரும்
தணிகாச லக்கடவுளே.