முருகன் App
தணிகாசலப் பஞ்சரத்தினம்
சித்திரவி நோதமுடன்2 / 5
தணிகாசலப் பஞ்சரத்தினம்

சித்திரவி நோதமுடன்

2✓
சித்திரவி நோதமுடன் திகழான சென்னியும்
சிறப்பான பன்னிருகையும்
திருமுடியில் மகுடமும் சுட்டியும் பட்டமும்
திருநீற்றுக் காப்பு மழுகும்
இரத்தின கடுக்கனும் புசகீர்த்தி பளபளென
ரவிதைகண்டிகை மார்பினில்
இரஜிததிரு மேனியும் முச்சிதப் பூணூலும்
இலட்சண முகத்தி னழகும்
நெற்றியில் திலதமும் நிகக்கன வடிவேலும்
நிறைந்த வொட்டி யாணமழகும்
நிகரான தண்டையும் நீலமயில் சேர்வையும்
நின்பெருமை சொல்ல எளிதோ
அங்கம் கலங்கியே நொந்துயான் தவிக்கும் வேளை
அப்பனே முன்பு வருவாய்
ஆறுமுக மானதிரு நீறுவொளி யானவருள்
ஆறுமுக மான குருவே.