முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்
சந்திரமுருகா நல்ல1 / 6
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்

சந்திரமுருகா நல்ல

1பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்✓
சந்திரமுருகா நல்ல தந்திரமுருகா ஞான
சற்குரு நாதமுருகா
சாரிமுருகா வறுமை தீருமுருகா சுவாமி
சச்சிதா னந்தமுருகா
சுந்தரமுருகா மயில்உ கந்தமுருகா எங்கள்
சூரசங் காரமுருகா
சோதிமுருகா ரத்ன வேதிமுரு காநிதம்
தேவர்கள் துதிக்குமுருகா
மந்திரமுருகா என்முன் வந்து முருகா வரந்
தந்துகாத் தருளுமுருகா
வாருமுருகா கிருபை பாருமுருகா உன்றன்
மைந்தனைக் காருமுருகா
அந்தமுருகா சத்தி மைந்தமுருகா எங்கும்
அழகான நீதிமுருகா
ஆறுமுரு காகுறை தீருமுருகா பழனி
ஆனந்த மானமுருகா.