முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்
செம்மைமுருகா நம்மைக்4 / 6
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்

செம்மைமுருகா நம்மைக்

4பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்✓
செம்மைமுருகா நம்மைக் காக்கும்முருகா விருது
சேவலங் கொடியமுருகா
செல்வமுருகா இனிய நல்லமுருகா எங்கும்
சோதியாய் நின்றமுருகா
நன்மைமுருகா லோக மேன்மைமுரு காதிரு
நாரணன் மருகமுருகா
ஞானமுருகா அரி தானமுருகா திவ்ய
நாகமணி யானமுருகா
வன்மைமுருகா எனக்கு உண்மைமுரு காவரம்
மகிழ்ந்தருள் தாருமுருகா
வாலமுருகா நீறு பாலமுருகா யானை
முகனுக்கு இளையமுருகா
அம்மைமுருகா வள்ளி யம்மைமுருகா வினை
அடிகரு வறுக்குமுருகா
ஆறுமுரு காகுறை தீருமுருகா பழனி
ஆனந்த மானமுருகா.