முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்
தெள்ளுமுரு காகுறை6 / 6
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்

தெள்ளுமுரு காகுறை

6பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்✓
தெள்ளுமுரு காகுறை சொல்லுமுருகா செவியில்
கேட்கவே இலையோமுருகா
தேனுமுரு காவரம் வேணுமுரு காமயில்
தெரிசனம் தாருமுருகா
வள்ளல்முருகா பொன்னு வள்ளிமுருகா சரணம்
வந்துகாத் தருளுமுருகா
வாய்த்தமுரு காநிதம் போற்றமுரு காஒரு
மரமாயிராத முருகா
சொல்லுமுருகா சுற்றி நில்லுமுரு காவொளி
தங்கநவ ரத்னமுருகா
சோலைமுரு காவடி வேலுமுருகா வேண்டித்
தொழுதவர்க் கருளுமுருகா
அல்லுமுரு காபகல் நல்லமுருகா சாமி
ஆம்கவிக் குதவுமுருகா
ஆறுமுரு காகுறை தீருமுருகா பழனி
ஆனந்த மானமுருகா.