முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்
சாரிமுருகா வித்தை5 / 6
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்

சாரிமுருகா வித்தை

5பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்✓
சாரிமுருகா வித்தை யுரைசெய்முரு காஇது
சமயம்வர மருளுமுருகா
சத்திமுருகா உமையாள் பெற்றமுருகா இந்த
தரணிபுக ழோதுமுருகா
கௌரிமுருகா நல்ல சரவண்முருகா எந்தன்
கிலேசமும் தீருமுருகா
கீர்த்திமுரு காசிறை மாற்றுமுருகா மனத்துக்கு
ஏற்றவரம் ஈயுமுருகா
கவனமுருகா உந்தன் தயவுமுருகா என்னைக்
கடைத்தேறப் பாருமுருகா
காசிமுருகா முன்னில் பேசுமுருகா வீர
காபாலி சூலமுருகா
அவனிமுருகா லோகப் பழனிமுருகா தேவர்க்கு
அருள்மய மானமுருகா
ஆறுமுரு காகுறை தீருமுருகா பழனி
ஆனந்த மானமுருகா.