முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்
பொன்னுமுருகா பாது3 / 6
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்

பொன்னுமுருகா பாது

3பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்✓
பொன்னுமுருகா பாது காக்குமுரு காதிருப்
புகழோதி உன்னைமுருகா
போற்றுமுரு காவனங் காத்தமுருகா வள்ளி
பொற்புயம் அணைந்தமுருகா
கன்னிமுரு காமெய் சொன்னமுரு காஎன்
கலியெலாந் தீர்த்தமுருகா
காந்திமுருகா தணிகை வாழ்ந்தமுரு காசிவ
கைலாச நின்றமுருகா
மன்னர்முரு காபணி மின்னமுருகா வேங்கை
மரமாக நின்றமுருகா
மயிலுமுரு காமொழி குயிலுமுருகா தேவர்
மகிழுஞ்சங் கீதமுருகா
அன்னமுருகா பஞ்ச வர்ணமுருகா உந்தன்
அடியவர்க் குதவுமுருகா
ஆறுமுரு காகுறை தீருமுருகா பழனி
ஆனந்த மானமுருகா.