முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்
செய்யமுருகா ஈராறு2 / 6
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார விருத்தம்

செய்யமுருகா ஈராறு

2பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்✓
செய்யமுருகா ஈராறு கையமுருகா தேவர்
செல்வனாய் வந்தமுருகா
செட்டிமுருகா தங்கக் கட்டிமுரு காகுல
தேவாதி தேவர்முருகா
மெய்மைமுரு காமயில் ஏறுமுருகா செய்த
தீவினை தீர்க்குமுருகா
வேலுமுருகா என்னை ஆளுமுருகா சீடர்
வேண்டுவரம் ஈயுமுருகா
தையல்முருகா அம்பு எய்யுமுருகா கல்வி
சகலகலை யோதுமுருகா
ஐயமுருகா சோதி வையமுருகா வீர
அசுரரை வென்றமுருகா
துய்யமுரு காசுயஞ் சோதிமுரு காதவத்
தோர்தொழும் ஆதிமுருகா
ஆறுமுரு காகுறை தீருமுருகா பழனி
ஆனந்த மானமுருகா.