முருகன் App
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள்
ஆறுமுகநாவலர்
இத்தனை கொடு4 / 6
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள் · ஆறுமுகநாவலர்

இத்தனை கொடு

பல்லவி✓
இராகம் - ஆகிரி, தாளம் - சாபு
இத்தனை கொடு வேதனைப்படல் கண்டு முமக்
கின்னு மிரக்க மில்லையா
அநுபல்லவி✓
சித்தி முத்திகடருந் தெய்வ மாணிக்க நதி
சேருங் கதிரை நகர் - திகழ் சுப்பிரமணியரே நான்(இத்)
சரணங்கள்✓
அண்டரிடரகற்றும் போதரே - அன்பர்
அனவரதம் பணி பொற் பாதரே
கண்டங்கரிய சோதி காதலரே யெனது
கண்ணேயென் கண்மணியே காருண்ய சாகரமே(இத்)
✓
எள்ளினெய் போலெங்கும் நிறைவீரே - உமக்
கென்றுயர் தெரியாதோ அறைவீரே
தெள்ளுந் தமிழால் வைதார் தமக்கு மருள்வீரென்று
தீதிலருணகிரி தேவர்சொல் நம்பிவந்தேன் (இத்)
✓
உம்மையல்லாது துணை யறியேனே - துய
ரோட்டிலீரேனு மும்மைப் பிரியேனே
இம்மை மறுமை வீடு மூன்று மும்மாலே யாகும்
இதுவே சத்தியஞ் சத்தியமென்று துணிந்து வந்தேன் (இத்) 4