முருகன் App
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள்
ஆறுமுகநாவலர்
சிவகுரு நாதருக்குச்6 / 6
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள் · ஆறுமுகநாவலர்

சிவகுரு நாதருக்குச்

பல்லவி✓
இராகம் - அசாவேரி, தாளம் - ஆதி
சிவகுரு நாதருக்குச் செய மங்களம் - நல்ல
செங்கமல பாதருக்குச் செய மங்களம்
அநுபல்லவி✓
பவமறுத் தெனையாளும் பன்னிரு தோளருக்கு
தவமுனிவர்களுளந் தங்கருளாளருக்குச் (சிவ)
சரணங்கள்✓
கன்னி வள்ளிநேசர் பாவ நாசருக்கு மங்களம்
கதிர் காமவேல ரீழ தேசருக்கு மங்களம்
மன்னுமுடியார்க் கருளு மாசில் குமரேசருக்கு
துன்னிய வனந்தகோடி சூரியப் பிர காசருக்குச் (சிவ)
✓
மங்கையுமை பாலர் வடி வேலருக்கு மங்களம்
மன்னுமறை நூலரனு கூலருக்கு மங்களம்
புங்கமிகு சிவகாம போதக சுசீலருக்குச்
செங்கையில் விளங்குவளைத் தெய்வயானை லோலருக்குச்(சிவ)
✓
சங்கரன் குமாரர்குல்லைத் தாரருக்கு மங்களம்
தன்னிக ரில்லாதநல் லூரருக்கு மங்களம்
பொங்குசினத் தவுணரைப் போரில் வென்ற வீரருக்குத்
துங்கவகத் தியற்கருள் தோமிலதி தீரருக்குச் (சிவ) 6