முருகன் App
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள்
ஆறுமுகநாவலர்
ஏனிந்தக்கேடு நெஞ்சே2 / 6
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள் · ஆறுமுகநாவலர்

ஏனிந்தக்கேடு நெஞ்சே

பல்லவி✓
இராகம் - துசாவந்தி, தாளம் - சாபு
ஏனிந்தக்கேடு நெஞ்சே - ஐயையோ - உனக்
கேனிந்தக்கேடு நெஞ்சே
அநுபல்லவி✓
மோனந்திகழுஞ் சைவ - முனிவருறை கதிரை
முருகா - முருகா - முருகாவென் றுருகிலை (ஏனிந்த)
சரணங்கள்✓
பொய்யாமுலக வாழ்வை நீங்கி - நித்திய
பூரணானந்த வாழ்விற் றேங்கி
மெய்யா மறிவானந்த - வேதமுடிவாய் நின்ற
விமலா - விமலா - விமலா - வென்றுருகிலை (ஏனிந்த)
✓
சனன மரணத் துயர் தீரு - மது
தானாயமரு நிலை சாரும்
கனகசபை நடனக் கருணாகரன் முன்றந்த
கந்தா - கந்தா - கந்தாவென் றுருகிலை (ஏனிந்த)
✓
அங்கியிடை மெழுக தென்னக் - கசிந்
தளவிலானந்த மிகத்துன்ன
கொங்கு கமழ் கடம்பு குல்லையொடு புனைந்த
குகனே - குகனே - குகனேயென் றுருகிலை(ஏனிந்த)