முருகன் App
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள்
ஆறுமுகநாவலர்
உன்னிருபாதந் தெரி1 / 6
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள் · ஆறுமுகநாவலர்

உன்னிருபாதந் தெரி

பல்லவி✓
இராகம் - சாவேரி, தாளம் - ஆதி
உன்னிருபாதந் தெரி - சனஞ்செய்த பின்னரே
யுவகைக்கடலு - ளாழ்ந்தேனே
அநுபல்லவி✓
தன்னிகரில் கதிரை - தனில்வாழும் போதனே
சற்குண்ய பரிபூரண - சண்முக நாதனே (உன்)
சரணங்கள்✓
ஆதி நடுவிறுதி நீங்கினோய் - சித்தோ
டசித்தாம் பிரபஞ்சமுற்றுந் - தாங்கினோய்
சோதிவடிவாய் நின்ற சூலபாணி புதல்வா
சூரனாதி மூவரைத் தொலைத்தருளும்முதல்வா (உன்)
✓
சனன மரணத்துயரத் தாழ்கின்றேன் - இன்னுஞ்
சஞ்சலச் சாகரத்துள் வீழ்கின்றேன்
இன்னமும் பாராமுகஞ் செய்யா தெனக்குருகுவா
யேதிலாத முத்தி யின்பந் தருகுவாய் (உன்)
✓
அருளுங்கருணைக் கடலல்லையோ - முன்ன
ரமரரிட ரகற்ற வில்லையோ
ஒருவிலெனது நோயை யோட்டுத லருமையா
உன்னையே நம்பிவந்தேனுக் குருகாமை பெருமையா (உன்)