முருகன் App
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள்
ஆறுமுகநாவலர்
நிருமல பரசிவசண்முகா3 / 6
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள் · ஆறுமுகநாவலர்

நிருமல பரசிவசண்முகா

பல்லவி✓
இராகம் - சுருட்டி, தாளம் - ஆதி
நிருமல பரசிவசண்முகா - சுத்த
நித்திய - சத்திய - வித்தகனாங்குக
அநுபல்லவி✓
திருலாவு மிலங்கையின் மேவிய
சீர்திகழுங்கதிர் காமத்துறைதரு
சிற்பரா - அருள் தற்பரா - அன்பர்
சிந்தையுகந் தமருந்தனி வேலனே (நிரு)
சரணங்கள்✓
பரமனருளும் புதல்வா - பரமானந்தசிவ
பத்தர்க்கருளு முதல்வா
கருணைசேர் சச்சி தானந்த வடிவே
கணிப்பிலாச்சது மறையின் முடிவே
கந்தனே - உமை மைந்தனே - என்னைக்
காத்து மலவிருள் தீர்த்தினிதாளுவாய் (நிரு)
✓
அறிவுக்கறிவாய் நின்றவா - கிரௌஞ்சகிரியுடன்
அவுணர்கி ளையைக் கொன்றவா
குறிகுண மிறந்திலகு முருகா
கூர்ந்துளாயணி மருமன் மருகா
கோலனே - புரிநூலனே - ஒற்றைக்
கொம்பினன் பின்வரு தம்பியே யின்பருள் (நிரு)
✓
அயனைச் சிறையில் வைத்தவா - அகத்தியமுனிவனுக்
கருளோடு பதேசித்தவா
வியனு லகமரருக் கருள் தாளா
வின்னுதல் வள்ளிக்கொடி புணருந் தோளா
மெய்யனே - எமதையனே - அர
விந்தமலர்திக ரும்பொற்பாதந்தந்தருள் (நிரு) 3