முருகன் App
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள்
ஆறுமுகநாவலர்
என்மே லிரக்கமில்லையா5 / 6
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள் · ஆறுமுகநாவலர்

என்மே லிரக்கமில்லையா

பல்லவி✓
இராகம் - கல்யாணி, தாளம் - ரூபகம்
என்மே லிரக்கமில்லையா சாமி - புதல்வனுக்குத் தந்தை
இரங்காதிருந்தா லென்சொல்லும் பூமி
அநுபல்லவி✓
தன்னிகரில்லாக் கதிரைமலை வாழுந்
தற்பரானந்த சாமி சுகாரம்ப
வுன்னுபய சரணாம்புய மல்லாம
லொன்றும் புக லிடமின்றினியாகுதல் (என்)
சரணங்கள்✓
துய்யசடட்சரத்தோ ரெழுத்தையுஞ்
சொல்லிலே னென்செய்வேன் சிறியேன்
கோடி சூரியப் பிரகாசமான வரோதய சுவாமி
உய்வகையறியேன் செய்யநின் னாமத்தைநினையேன்
பவந்தீரா துலைகின்றேன் வினையேன்
அன்னை தெய்வமுநீயே அடியேனுக்குய் வருள்வாயே
அருள்சேர் சீலா - பாலா கோலா
நல்லனு கூலா - செங்கதிர்வேலா - இன்னும் (என்)
✓
நித்தியபரி பூரணானந்த நிருமலா
தீதமுருகா பாம்பில் நிருத்தம் புரியும்
பரந்தாமனுக்கு நிகரில்லாத நன்மருகா
துத்திய வள்ளி மணாளா பல தொண்டர்
வணங்கிடுதாளா
என்மேற் சூதை யெண்ணாதே
என்னையிந்த வாதை பண்ணாதே
கனமிகு துய்யா - மெய்யா - பொய்யாப்
பன்னிருகையா - ஐயா - செய்யா - இன்னும் (என்)
✓
ஆறுமுகவென் றழைக்குங் கீரனுக்
கருள்புரிந்திடு முதல்வா
அனவரதமுந் துதிசெயுந்திரி யம்பகற்கொரு புதல்வா
சீறுமவுணனை வென்றாய் குறத்தேவி முன்வேங்கையாய்
நின்றாய்
நின்மேற் சிந்தனைவையே
னொருக்காலும் வந்தனை செய்யேன்
கன ஈழதேசா - ராசா - விலாசா
நல்லையில் - வாசா - நேசா - ஈசா - இன்னும் (என்) 5