முருகன் App
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்
அருளாரமுதே2 / 6
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்

அருளாரமுதே

4✓
அருளா ரமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா வெனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்.
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
5✓
முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவே லரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
6✓
அருளால் உலகைத் தாங்கிவரும்
அப்பன் மகிழப் பிரணவத்தைக்
குருவா யமர்ந்து அருள்புரிந்த
குகனே! முந்தைக் கொடியவினை
இருளிற் கிடந்து கரைகாணா
தேங்கும் அபலை உய்யவருட்
குருவாய் வந்தா லாகாதோ?
குமரா, நல்லைப் பெருமானே!