முருகன் App
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்
நல்லூர்ப் பதியில் வாழ் முருகா!5 / 6
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்

நல்லூர்ப் பதியில் வாழ் முருகா!

1✓
நல்லூர்ப் பதியில் வாழ்முருகா
அல்லல் தீர்த்து ஆள்முருகா
2✓
ஒன்றாய்ப் பலவாய் ஒளிர்முருகா
என்றும் எழிலார் இளமுருகா!
3✓
சுத்த மனத்தவர் தொழுமுருகா!
உத்தமர் நெஞ்சத் தொளிர்முருகா!
4✓
சுந்தர ஞானச் சுடர்முருகா,
செந்தமிழ் வடிவிற் றிகழ்முருகா!
5✓
தந்தைக் கருளிய தனிமுருகா,
கந்தம் கமழ்செங் கதிர்முருகா!
6✓
அசுர குணப்பகை யறுமுருகா,
இசையமு தக்கடல் இயல்முருகா!
7✓
கொடியவர் பொடிபட வருமுருகா,
அடியவர் இடர்கெட அருள்முருகா!
8✓
வெற்பைப் பொடிசெயும் வேல்முருகா
அற்புதத் தொண்டரை யாள்முருகா!
9✓
மோனக் குகைதனில் வாழ்முருகா,
ஞானச் சுடர்வடி வேல்முருகா!
10✓
திருமுரு கா,ஓம் ஜெயமுருகா,
இருவினை கெடவரும் இசைமுருகா!