முருகன் App
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்
வீரத் தமிழர் குலதெய்வம்6 / 6
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்

வீரத் தமிழர் குலதெய்வம்

1✓
வீரத் தமிழர் குலதெய்வ மாய்வந்த
வெற்றிக் கனல்முரு கன்!—இன்பப்
பேரெழிற் குன்றவன், ஆரமு தக்கடல்,
பேரறி வுக்கதி ரோன்!
2✓
நம்பும் அடியவர் துன்பம் துடைத்திடும்
ஞானக் குமர குரு!—தம்
என்பும் உருக நினைப்பவ ருள்வளர்
இன்பக் கருணை யுரு!
3✓
வஞ்சகக் காமப் பொறாமைப் பகையிருள்
மண்டி எதிர்த்திடி னும்,—வேலன்
விஞ்சை விழிக்கனல் வீசில், அனைத்தும்தீப்
பஞ்செனப் பாழ்படு மே!
4✓
விண்ணை யளாவும் மலையெனத் தொல்லைகள்
மேவி எதிர்த்திடி னும், அவன்
திண்ணிய நாமத்தைச் சிந்தையில் ஊன்றிச்
சிரித்திடத் தூள்படு மே!
5✓
புள்ளி மயில்மிசை வள்ளிக் கொடியினைப்
புல்லிக் களித்துநிற் கும்,— அந்த
வெள்ளி மலைக்குகன் உள்ளத்தில் மேவினால்
வேண்டுமோ வேறு சுகம்?