முருகன் App
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்
பந்தம் அகற்றும் பதிவேல்4 / 6
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்

பந்தம் அகற்றும் பதிவேல்

✓
மாமயி லேறும் மணிவேல்;—குற
வள்ளி,தெய் வானையைப் புல்லும் கனிவேல்;
பாமலர்க் கிச்சைப் படும்வேல்;—சிவ
பார்வதி பெற்ற பதுமச் சுடர்வேல்! (மாமயில்)
✓
கட்டற்ற ஞானக் கதிர்வேல்;—வெறும்
கற்பனைக் கெட்டாக் கருணை நிதிவேல்;
எட்டுத் திசையும் படர்வேல்;—பார்
இயற்கை யெழிலில் இனிக்கும் சுடர்வேல்! (மாமயில்)
✓
அச்சம் அகற்றும் அயில்வேல்;—பர
மானந்த வெள்ளத் தழுத்தும் அருள்வேல்;
முச்சுட ராகப் பொலிவேல்;—ஆழ்ந்த
மூலத்திற் பொங்கி முழங்கும் கனல்வேல்! (மாமயில்)
✓
பந்த மகற்றும் பதிவேல்;—தூய
பக்தி,வை ராக்கியம் சித்தி தரும்வேல்;
சிந்தைக் கினிய சிவவேல்;—இன்பத்
தெள்ளறி வாகத் திகழும் நவவேல்! (மாமயில்)
8✓
தீரர்கை வீரத் திருவேல்;—கொடும்
சிந்தையிற் பாய்ந்து சிதைக்கும் எறிவேல்;
வாரி குளித்த வடிவேல்;—கவி
வாணர்தம் நாவில் மகிழ்ந்து தவழ்வேல்! (மாமயில்)