முருகன் App
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்
குருவே நல்லூர்க் கதிர்வேலா1 / 6
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்

குருவே நல்லூர்க் கதிர்வேலா

1✓
ஊனாய், உயிராய், உலகமெலாம்
ஒளிரும் கருணைப் பேரிறைவா!
கோனாய்த் தமிழர் குலங்காக்கும்
குமரா, பரம குருதேவா!
வானோர் பணியும் படைத்தலைவா
வள்ளி படரும் மலைக்கிழவா!
தேனார் நல்லைப் பதிவாழும்
செல்வக் குமரப் பெருமானே.
2✓
அமுதம் பொலியும் முகமாறும்,
அபயம் தருகண் ஈராறும்
இமயம் பொலிபன் னிருதோளும்,
எதிர்ந்தார் நடுங்கும் தனிவேலும்,
அமரர் அணங்கு வள்ளியுடன்
அழகார் மயில்மேல் வாராயோ?
குமரா, அடியேன் கலிதீரக்
குருவே நல்லூர்க் கதிர்வேலா!
3✓
அரும்பு விழிகள் புனல்சொரிய,
அங்கம் புளகித் தன்பரெலாம்,
கரும்பே! தெவிட்டாக் கனியே! எம்
கண்ணே!' என்றுன் சந்நிதியில்,
துரும்பாய் உருக, எனைமட்டும்
சோம்பிக் கிடக்கும் கருங்கல்லாய்,
இரும்பாய் வைத்தல் முறையாமோ?
இறைவா! நல்லூர்க் கதிர்வேலா!