சஷ்டி காவடிச்சிந்து
சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்
காவடிப் புகழ்7 / 7
சஷ்டி காவடிச்சிந்து · சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்
காவடிப் புகழ்
1✓
சீராரும் ஞானகுரு நாதா - உனை
சிந்திக்கும் மைந்தற்கிரங்கும் வினோதா
2✓
தீரா கடம்பணி வத்தா - சர்வ
தேவாதி தேவர்கள் மேவும்பொற் பாதா
3✓
வீராதி வீரனே அபேதா-இந்த
வேளையில் வந்தென்னை யாளப்போ காதா
4✓
வாரா திருப்பதும் சூதா - இந்த
வன்புவியில் நான்பட்ட துன்பம் போதாதா
5✓
ஆறாறு பனிரெண்டு தோளா - மிக்க
அழகான தெய்வானை தழுவு மணவாளா
6✓
ஒராறு முகனே குணாளா - ஞான
ஓங்காரனே என்சொற் பாங்காகக் கேளாய்
7✓
காரார் குழல் சத்தி பாலா
கந்தா பயந்தே கலங்குறேன் சீலா
8✓
தீரா வினைதீர்க்கும் வேலா - மாது
சிங்கார வள்ளிக் கலங்கார லோலா
9✓
ஆரா ரிருந்தென்ன லாபம் - எந்தன்
ஆசைக் குரித்தான நீ சுப்ரதீபம்
10✓
நீரார் ஜடேசன் குமாரா - உண்மை
நெறிகண்ட பேருக்கு அருளுமுதாரா
11✓
அரஹரா குமரகுரு தேவா - ஓம்
அருளாளனே வையா புரிமானுபாவா
12✓
மாலுக் குரித்தான மருகா - திகழ்
வடிவேல னேசேவற் கொடியோனே முருகா
13✓
பழனியில் வாழ் சுப்ரமண்யா - கோடி
பத்தர் துதிக்கும் ப்ர சித்தலாவண்யா
14✓
மாசிலாப் புண்யானு கூலா - செல்வம்
மங்கா தொளிர் சிக்கல் சிங்கார வேலா
15✓
கண்டி நகர் வாழும் விசாகா-நல்ல
கார்த்திகேயா புண்ய மூர்த்திவை போகா.
16✓
திருப்பரங் குன்றுடையானே - உன்
திருத்தாள் துதிப்பவர் வருத்தந் தீர்ப்போனே-நீ
17✓
அசுரர் குலத்தை யறுக்க - அன்று
அரனார் நுதற்கண் அனலால் பிறக்க
18✓
வசுக்களெல் லாமுந் துதிக்க - அக்னி
வாங்கி சரவணத் தாங்கி விடுக்க
19✓
கங்கை யணைத்துக் களிக்க - ஆறு
கான்முளை யாகிநீ தேன்வாய் திறக்க
20✓
அன்போடு உமையாள் எடுக்க - அங்கே
அன்றாறு உருவமும் ஒன்றாய்ச் சிறக்க
21✓
கந்தா வென்றீசர் அழைக்க - தேவர்
கஷ்டங்கள் தீர்ந்ததென் றிஷ்டம் பலிக்க
22✓
பின்பு தனப்பால் கொடுக்க - அதில்
பீரிட்ட அமிர்தமும் நீரிற் கலக்க
23✓
சோர்ந்தழும் மீனும் புசிக்க - முன்போல்
சொந்த வுருவைக்கொண்டு வந்தெதிரில் நிற்க
24✓
தம்பியர் துணைகொண்டு மிக்க - லீலைத்
தான்செய்தீ ரேஜெக மேங்கித் தவிக்க
25✓
மலைகளெல் லாமும் பறக்க - அப்போ
வாடிய தேவர்கள் ஓடி யொளிக்க
26✓
மதியற்ற அயனும் மதிக்கா - தெண்ணி
வருகையில் பிரணவப் பொருள்தனைக் கேட்க
27✓
விதியோன்அவ் வேளை விழிக்க - உடன்
வீரபாகைக்கொண்டங் கோர் சிறைவைக்க
28✓
சதிராய்ச் சிவனும் தடுக்க - முக்கண்
சாமிக்கும் சாமியாய்த் தாமாகி நிற்க
29✓
அரியயன் அமரர் அதிர்ச்சிக்க - பல
அகில உலகும் புகழ்ந்தே இச்சிக்க
30✓
நாதங்க ளெங்கும் முழக்க - அங்கு
நானாவித வன்ன சேனை நெருக்க
31✓
கானசங் கீதம் படிக்க - வான
கன்னியர்கள் ஓர் கோடி முன்னே நடிக்க
32✓
தீபங்க ளெங்கும் ஜொலிக்க - வித்வ
சித்ரகவி ராஜர்கள் சித்தங் களிக்க
33✓
செங்குந்தர் என்றும் செழிக்க - வெனச்
செப்புமறை விப்பிரர்கள் ஆசீர்வதிக்க
34✓
மத்தாப்பு வாணம் விளக்க
மன்னரொடு தேவர்களும் பன்னீர் தெளிக்க
35✓
எங்கும் திருப்புகழ் படிக்க - தேவ
இந்திரனும் சந்திரனும் வந்தங்கிருக்க
36✓
கணபதியார் முன்னே நடக்க - எங்கள்
கனவீர பாகெனும் துணைவன் முடுக்க
37✓
சந்தனம் புனுகு வாசிக்க - கட்டி
சர்க்கரைப் பால்பழம் கற்கண் டிறைக்க
38✓
இந்தஉல கெல்லாம் பிழைக்க - வரும்
எங்கந்த நாதவென செங்குந்தர் நிற்க
39✓
கற்பூர தீபங்கொடுக்க - முழுதும்
கணகணவென் றடிபடும் மணிஎச் சரிக்கை
40✓
நீதருங் காக்ஷியை நினைக்க - என்
நெஞ்சங் கரைந்துடலும் மயிர்க்கூச் செடுக்க
41✓
வந்திடுங் கந்த கும ரேசா
வள்ளிதெய் வானைக்கு கந்தமுருகேசா
42✓
எட்டிகுடி கதிர்காம ராயா
எப்பொழுதும் மெய்ப்பொருள் விரிக்கின்ற தூயா
43✓
போரூர் திருப்பரங் குன்றோய் - உனைப்
போற்றுவார் தங்கள்வினைக் கூற்றினையே வென்றோய்
44✓
கழுகுமலை சிக்க லாரூரா
கற்பகமே அற்புதத் திருப்புழ் சிங்காரா
45✓
காளத்தி புலிவலம் சிற்றூர்
கற்பூர வாசத் திருத்தணி களத்தூர்
46✓
வயித்தீஸ்வரன்கோயில் வாசா - கலியுக
வரதனே கார்த்திகை விரதர்களின் நேசா
47✓
குன்றுதோ றாடுமுரு கோனே
கோலமயில் மீதிலமர் வேலவ சீமானே
48✓
பழமுதிர் சோலைவளர் சாமி - வைணவப்
பாங்கான வேங்கடத் தோங்குமுயர் நேமி
49✓
கும்பகோணம் குமர கோட்டம்
கோவையொடு தேவைமரு ணாசல கொண்டாட்டம்
50✓
உள்ளபடி என்முறையைக்கேளாய் - பிறகென்
ஊழ்வினையைப் போக்கியருள் ஏழை பங்காளா
51✓
பூராய மானப் படிப்பு - நான்
புத்தியாய்க் கற்றென்ன முற்றும் நடிப்பு
52✓
பெண்மோகத்தில் நானோ கெட்டி - ஞானப்
பிரசங்கம் செய்வதில் துரைசிங்கக் குட்டி
53✓
என் சொல்லைத் தள்ளி ஆக்ஷேபம் செய்ய
எவர் வரினும் நாய்க்கு மேல் உண்டாகும் கோபம்
54✓
என்போல மாதர்கள் மீது - மோகம்
எவர்கொண் டலைந்தார்கள் புவனத்திலோது
55✓
அன்பென்னும் வார்த்தையோ தூரம் - மற்ற
அக்கிரம மென்றா லெனக்குள்கவிகாரம்
56✓
இல்லையடைந்து மேபிக்ஷை - கேட்டு
இடம்விட்டுப் பெயரு முன் அடைவாரே சிக்ஷை
57✓
ஆலய மென்றாலோ நஞ்சு - இதர
அநியாய மென்னிலோ துணியுமென் னெஞ்சு
58✓
மதுபான வகையே தான் சொர்க்கம் - அதை
மறுப்போ ரிடத்தே தொடுப்பேனே தர்க்கம்
59✓
கலகத்தில் நான்முதற் பாதம் - எல்லாம்
கற்றவன்போல நடிப்பேன் எப்போதும்
60✓
பொய்யூரே என்குடி யிருப்பு - அந்தோ
புகலுமெய் யென்றாலே மிகவும் வெறுப்பு
61✓
சொல்லலங் காரங்கள் ஜாஸ்தி - கெட்ட
துற்குணத்தோடு குதர்க்கந்தான் ஆஸ்தி
62✓
ஆகாயக் கோட்டை யென்போலே - பேசி
யார்கட்டுவார்கள் தன் வாய்விட்டு மேலே
63✓
பொருளில்லை யென்கின்ற ஏக்கம் - எனக்கு
புதிதல்ல ஏராளப் பேராசை வீக்கம்
64✓
நல்லமதி யென்பதுவே நீக்கம் - இந்த
நாடோடி ஈடேற நீ செய்வாய் மார்க்கம்
65✓
பொன்னார் திருப்பாத கஞ்சம் - அதில்
பொங்கி வழிந்தே யுருகுதென் நெஞ்சம்
66✓
இன்னமும் செய்யாதே வஞ்சம் - நீதான்
ஏழைக் கிரங்கினால் இதிலென்ன பஞ்சம்
67✓
ஜென்மம் கடைத்தேற கொஞ்சம் - தயை
செய்யவேண்டுமுரு கையனே தஞ்சம்
68✓
அய்யய்யோ பாழுங் குடும்பம் - அதை
ஆரம்பஞ் செய்கையில் யான்கண்ட இன்பம்
69✓
பொய்யல்ல மெய்யான துன்பம் - இப்போ
புகுந்ததுக்குது கவலை என்கின்ற ரம்பம்
70✓
ஆருக்கு யார் சத மய்யா
அவரவர் வினைக்கவர் அடைவதென பொய்யா
71✓
சண்டாள துஷ்ட னானாலும் - உன்னைச்
சார்ந்தபின் விட்டுவிடக் கூடாதெக்காலும்
72✓
செய்ததெல் லாமுந்தப் பையா - மெய்யாய்ச்
செய்திடேன் பிழைகளினி மேலும் சுப்பையா
73✓
பிள்ளைமேல் தாய்க்குண்டோ கோபம் - இதைப்
பேசப்போ னாலையோ பெரியபரி தாபம்
74✓
எப்போதும் இக் கஷ்டந்தானோ - இதற்
கென்னபதில் சொல்லுகிறாய் உன்னை விடுவேனோ
75✓
முருகாவென் றுன்னையொரு தரமே - நெஞ்சில்
மொழிந்தாலும் ஆனந்தம் வழியும் நிரந்தரமே
76✓
நான் மட்டும் பாபியா சொல்லு - உனக்கு
நன்றா யிருக்குதா ஏனிந்த மல்லு
77✓
நம்பியிருக் கின்றேனே நேமா
நட்டாற்றி லென்னைக்கை விட்டுவிடப் போமா
78✓
மாயை யெனும் சண்டாளப் பூதம் - தினம்
வம்புக் கிழுத்தென்னைச் செய்யுதே பிரமாதம்
79✓
வறுமையெனும் வியாதியோ துக்கம் - அது
வந்துவிடு மோவென்ற பயமதொரு பக்கம்
80✓
ஜீவவதை செய்ததொரு கோடி - இன்னம்
செய்வதை நிறுத்த விலை திவ்யகவி பாடி
81✓
தோத்தரித்தேனே ப்ரபந்தம் - அதில்
சுகமென்ன செய்கையிலோ நான்மிக்க பந்தம்
82✓
மெய்ஞ்ஞான பேச்சுக்கள னந்தம் - கற்ற
மேலோர்க்கு மேலாகப் பேசுவானந்தம்
83✓
வஞ்சகம் பலபேர்க்குச் செய்தேன் - ஞான
வாழ்வுடைய பெரியோரைத் தாழ்வு சொலிவைதேன்
84✓
தரியிலே ஓடுகிற நாடா - போலும்
தங்காமல் ஓடியலைந் தின்னமுமிப் பாடா
85✓
செட்டிமகனே இந்தச் சூது - நீதான்
செய்வதிற் பலனில்லை ஜம்பஞ் செல்லாது
86✓
வட்டிக்கு வட்டி தப்பாது - உன்பால்
வாங்காமல் விட்டிடிலென் வஞ்சந் தீராது
87✓
அருட்ஜோதி முருகனெனும் நாமா
அய்யநான் உன்னடிமை கையைவிடலாமா
88✓
சிதம்பரம் பாண்டி நாயகனே
செங்கைவடி வேலழக சிங்காரமுகனே
89✓
சென்னைவட பழனிவளர் தீரா-செல்வ
சித்திகள னைத்துமருள் சித்திர மயூரா
90✓
திருவொற்றி யூர்வளருந் தேவே - திகழ்
தேசறு குகேச முருகேச என்கோவே
91✓
திருமூலட் டானத்தை நாடி - நான்
செந்தமிழில் கவிபாடி வந்தேனுனைத் தேடி
92✓
வள்ளலார்க் கருள்செய்த முத்தே - மேலாம்
வானவருக் குதவி செயும் ஞானமய வித்தே
93✓
அருணகிரி பரவிய விசாகா - தெய்வ
அரியதிருப் புகழோதும் பிரியர்களின் மோகா
94✓
காவடி எடுப்போர்க்கு நேயா - உலகில்
கண்கண்ட தெய்வமே எண்டிரு சகாயா
95✓
சிவலிங்கம் பங்கில் வளர் தேனே - அவர்
செய்கின்ற பூஜைதனைக் கைகொள்ளுவோனே
96✓
வாழையடி வாழையாய்த் தானே - பூசை
வாங்கிக்கொள சந்ததி வழங்கிடும் கோமானே
97✓
உன்னாணை யென்னையும் விடாதே - எனக்கு
உனையன்றித் துணையில்லை எனையாள் இப்போதே
98✓
மாதேஜோ மண்டலத் தெந்தாய் - தேவை
மகிழ் பாம்பன் சாமிக்கு வந்துவரந் தந்தாய்
99✓
மூவாறு கண்ணுடைய மூர்த்தி - அய்யா
மூவுலகும் பேசுதே தேவாரின் கீர்த்தி
100✓
நயினாசாமிக்குரிய நேசன்
நடராஜ கவிநாயேன் அடியவர்கள் தாசன்
101✓
காவடி புகழ்ச்சி யுன்மீது - ஏதோ
காமா சோமாவென்று பாடினனிப் போது
102✓
தட்டாமல் இதையேற்றுக் கொண்டு - சகல
சம்பத்தும் நீ தருவாய் என்பத்தி கண்டு
103✓
நான்சொன்ன பாடலிதைப் பாடி - வரும்
நண்பர்களுக் கன்புசெய முன்பெதிர்வா தேடி
104✓
கோடானு கோடி நமஸ் காரம் - எந்தன்
குறைதீர்த்து ஆளுவதும் துரையே யுன்பாரம்
105✓
குமர குருபர குகனே வேல்வேல்
அமரர் தொழும் சமரபுரி அறுமுகனே வேல்வேல்
106✓
அருள்புரிக அருள்புரிக வேல்வேல்
அருள்புரிக அருள்புரிக ஆனந்த வேல்வேல்
107✓
வெற்றி சாமுண்டி வடிவேல்வேல்
வேற்சாமி சிவலிங்க வீரவடி வேல்வேல்
108✓
சீராரும் ஞானகுருநாதா - உனைச்
சிந்தித்த மைந்தற் கிரங்கும் வினோதா.