குமரகுரு தாசப் பெருமானே-எம்
குறைகளைந்தே ஆசி தருவோனே (கு)
சமரபுரியவன் அந்த விம லர்க் கிறையாங் கந்த
சரவணபவன் சொந்த உருவமெனவே வந்த (கு)
ஆனபிற மதங்கள் அனைத்துமே தாழ
அறுமுகச் சிவன்அன்பில் அனைவரும் ஆழ
மானிலம் யாவுமுன் மலரடி சூழ
மன்னுமுஹா தேஜோ மண்டலம் வாழ (கு)
அடியரெம் பூஜையை ஏற்றுக் கொள்வாயே
அருணகிரிப் பெயரால் அழைக்கப் பெற்றோயே
கொடிய வறுமைப்பிணி கூற்றொழிப் பாயே
குணமலையே எமது குலதெய்வம் நீயே. (கு)
சங்கந்தனிலே நாங்கள் சார்ந்திடக் கூட்டு
தவறு செய்தாலும் எமைத்தாங்கிப் பாராட்டு
தங்கமே எமக்குஉத் தமவழி காட்டு
தாசன் நயினாசாமித் தமிழ்ப்பதங் கேட்டு. (கு)