முருகன் App
சஷ்டி காவடிச்சிந்து
சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்
சாமுண்டீஸ்வரி துதி3 / 7
சஷ்டி காவடிச்சிந்து · சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்

சாமுண்டீஸ்வரி துதி

ஆசிரியம்✓
மாயிமஹீ ஷாசுர மர்த்தனி மனோன்மணி
மாதங்க கௌரி சூலி
மரகதாங்கி ராஜ ராஜேஸ்வரி விமலி
மணிமகுட லோக ஜனனி
தூய இதயத்தினர் தொழுங்கரக பாலினி
துர்க்கையே தாக்ஷா யணி
துரைமக ளெனுகுமரி பார்வதி பராசக்தி
துஷ்ட சங்காரி நிமலி
நீயலதிவ் வடிமையைக் காப்பதற் கெவருண்டு
நித்ய கல்யாணி எந்தன்
நினைவிலும் கனவிலும் குடியிருந் தெந்நாளும்
நீங்காத செல்வம் அருள்வாய்
தாயினுந் தயையுடைய சிவகாம சுந்தரி
தர்மசம் வர்த்த னியுனைத்
தாமண்டி தொழுபவர்க் காமென்றும் துணைசெயும்
சாமுண்டி மாகா ளியே.